நாவலடி மர்கஸ் அந்நூரில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - Sri Lanka Muslim

நாவலடி மர்கஸ் அந்நூரில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)


கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கீழுள்ள நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (6) சனிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் ஏ.ஹபீப் காஸிமி அவர்களின் வழிகாட்டலில் பிரதி அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அண்மையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்குடா நடுவர் சங்க உறுப்பினர்கள், உலமாக்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

_DSC0165 _DSC0276

Web Design by Srilanka Muslims Web Team