இலங்கை வாழ் முஸ்லிம்களே எச்சரிக்கை ஈமானை பறிக்க பாறிய முயற்சி செய்யும் காதியானிகள் - Sri Lanka Muslim

இலங்கை வாழ் முஸ்லிம்களே எச்சரிக்கை ஈமானை பறிக்க பாறிய முயற்சி செய்யும் காதியானிகள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஆபூ ஹபீப் (நிழாமி)
படிப்போம் பகிர்வோம்


08.04.2019 ஆம் திகதி திங்கட் கிழமை காதியானிகள் பொலன்னறுவை பிரதேசத்தில் இறுதி நபித்துவதிற்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகின்றனர்.

முற்றிலும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்கள் மொழி பெயர்த்து முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதோருக்கு பாதை ஓரங்களில் வைத்து வினியோகித்து வருகின்றனர்.

அஹ்மதிய்யாக்கள் எனப்படும் காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்று முலு உலக முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்ட விடயமாகும்.

இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், 250 மேற்பட்ட அரபு கல்லூரிகள் இவர்கள் முஸ்லிம்கள் அல்லர், முஸ்லிம் என்ற உறிமை இவர்களுக்கு கிடையாது என்ற விடயத்தில் உறுதியாக இறுக்கின்றனர்.

அத்துடன் அவர்களின் விடயத்தில் முஸ்லிம்கள் புத்தியோசிடையுடன் நடந்து கொள்ளவோண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது “இறுதி நபித்துவமும்” என்ற பிரகடனத்தில் வேண்டிக் கொண்டுள்ளது.

அவ்வகையில் முஸ்லிம்களாகிய நாம் இவ்விசமிகளின் செயற்பாட்டிளிருந்து உம்மதை பாது காக்க என்ன செய்யவேண்டும்

1. RRT எனப்படும் முஸ்லிம் சட்டத்தரனிகளின் ஒரு அமைப்பினால் வெளியிடப்பட்ட
(COMPILATION OF HISTORICAL DECLARTIONS SRI LANKAN AND (GLOBOL MUSLIMS ON QAADIYANISM)
காதியனிகள் பற்றி தேசிய மற்றும் சர்வதேச முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் மேற்கொண்ட தீர்மானங்களின் தொகுப்பை பெற்று மக்கள் மயப்படுத்துவது.

இத்தொகுப்பின் ஆரம்பத்தில் காதியானிகள் பற்றி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா அவர்களும் இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகள் ஒன்றியமும் (MUSLIM LAWYERS ASSOCIATION)
வழங்கிய கருத்துரையிலிருந்து பின் வரும் விடயம் கட்டாயம் இங்கு கூறப்பட வேண்டும் என நினைக்கின்றேன்.

சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் காதியானிகள் பற்றி கருத்து தெரிவிக்கும் பொழுது; இஸ்லாத்தின் அடிப்படை சட்டங்களுக்கு முரணான கொள்கையுடைய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவரை இவர் ஒரு முஸ்லிம் அல்ல என்று முற்றாக நிராகரித்துள்ளார், மிர்ஸா குலாம் அஹ்மத் இறுதி நபித்துவத்தை மறுத்தது மட்டுமல்லாமல் தன்னை ஒரு நபி என்றும் தன்னையே வாக்களிக்கப்பட்ட ஈஸா என்றும் தானே மஹ்தி என்றும் காலத்திற்கு காலம் ஒன்றுக்கொன்று முரணான பிரகடனங்களை வெளியிட்டுள்ளார்.

இதே அடிப்படையில் இலங்கையின் சட்டத்தரணிகளும் அவர்களுடன் தொடர்பான இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகளின் சங்கமும் ஏகோபித்த கருத்தாக காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்றும் வலியுறுத்தியுள்ளமை இங்கு கவனிக்கத் தக்கதாகும்.

• அத்துடன் காதியானிகளை மார்க்கக் கடமைகளைச் செய்வாற்காக பள்ளிவாசல்களுக்கு அனுமதிக்கக் கூடாது.

• முஸ்லிம் என்ற வகையில் ஒரு முஸ்லிமுக்கு உரிமையான பிரதி நிதித்துவத்தை காதியானிகளுக்கு வழங்க முடியாது.

• ஒரு முஸ்லிம் இருக்கவேண்டிய பதவியில் காதியானி ஒருவர் இருக்க முடியாது.

என்ற கருத்துக்களை இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

2. இதுவரை காலமாக காதியானிகளினால் சந்திக்கப்பட்ட மாற்ற் மதத்வர்களை இனங்கண்டு RRT அமைப்பின் தொகுப்பை வழங்குதல்.

3. பொதுவாக பிற ஊர்களில் திருமண பந்தங்களை மேற்கொள்ள இருப்பவர்கள் குறித்த மணமகன் அல்லது மணமகள் பற்றி அவ்வூர் மஸ்ஜிதின் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீர்கொழும்பு பஸ்யால, புத்தளம், பாணதுர, பொலன்னறுவை போன்ற காதியானிகள் செறிந்து வாழும் இடங்களில் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இருப்பவர்கள் இப்பிரதேச மஸ்ஜித்களை தொடர்ப்புகொண்டு அக்குடும்பத்தின் விபரங்களை பெற்றுக் கொண்டு அவர்களை முஸ்லிம்களா? அல்லது காதியானிகளா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கப்படடிருப்பதால் காதியானிகளை திருமணம் செய்வது முஸ்லிம்களுக்கு ஆகுமானதல்ல.

4. ஆலிம்கள் மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் துறைசார்ந்தோர் இணைந்து காதியானிகள் மேற்கொள்ளும் போலிப் பிரச்சாரங்களில் முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளாதிருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவும் வழிகளை அடையாளம் கண்டு அவற்றை தடுக்க முயற்சிக்க வேண்டும்.

5. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நேற்று 07.04.2019 ஆம் திகதி வெளியிடப்பட்ட அல்குர்ஆன் சிங்கள மொழியிலான விளக்கவுரை பிரதிகளைப் பெற்று மாற்றுமத சகோதரர்களுக்கு வழங்கி இஸ்லாத்தை தெளிவு படுத்தவேண்டும்.

அஹ்மதிய்யாக்கள் முஸ்லிம்கள் அல்லர் என தீர்ப்பு வழங்கிய சர்வதேச அமைப்புக்கள்

1.றாபிததுல் ஆலமில் இஸ்லாமீ எனும் சர்வதேச அமைப்பு கி.பி. 1974 ஏப்ரல், மாதம் மக்காவில் நடைபெற்ற மாநாட்டில் காதியானிகள் காபிர்களே என்ற தீர்ப்பை வெளியிட்டது.

2.கி.பி. 1974 செப்டம்பர் 7 இல் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இவர்கள் முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

3.கி.பி. 1978 ஜுலை 6 முதல் 8 வரை கராச்சியில் நடைபெற்ற ஆசிய இஸ்லாமிய மாநாட்டிலும் அவர்கள் காபிர்கள் என்ற தீர்;ப்பு வழங்கப்பட்டது.

4.மஜ்மஉல் பிக்ஹில் இஸ்லாமீ எனும் அமைப்பும் கி.பி. 1985 டிசம்பர் 22 முதல் 28 வரை ஜித்தாவில் நடைபெற்ற மாநாட்டில் அதே தீர்ப்பை வெளியிட்டது.

5.IPC international அமைப்பின் 1987 ஆம் ஆண்டின் மார்க்கத் தீர்ப்பு – கலாநிதி அஹ்மட் ஹுஸைன் டீடாட்- தென்னாபிரிக்கா.

6.1969 ஜுன் 23 இல் ‘மஜ்லிஸ் உலமா இஸ்லாம்’ – சிங்கப்பூர் அஹ்மதிய்யா காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்ற தீர்பைவெளியிட்டது.

7.1998 ஜுன் 22 இல் மலேஷியாவின் மார்க்கத்தீர்ப்பு.

8.தென்னாபிரிக்காவின் இஸ்லாமிய ஃபிக்ஹ் சபையின் மார்க்கத் தீர்ப்பு.

IMG-20180625-WA0016

IMG_20190408_132254 IMG_20190408_132254

Web Design by Srilanka Muslims Web Team