கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சந்திரிக்கா விஜேரத்ன நியமனம் - Sri Lanka Muslim

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சந்திரிக்கா விஜேரத்ன நியமனம்

Contributors
author image

Presidential Media Division

இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக மங்கள பி.பீ.யாபா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருமதி சந்திரிக்கா விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளதோடு அவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.04.11

Web Design by Srilanka Muslims Web Team