விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம் ஏப்ரல் 29 இல் - கல்வியமைச்சின் செயலாளர் » Sri Lanka Muslim

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம் ஏப்ரல் 29 இல் – கல்வியமைச்சின் செயலாளர்

received_588509204959366

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அரசபாடசாலைகளுக்கு 3850 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் எம்.என் ரணசிங்க தெரிவித்தார்.

நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டோரின் நியமன பெயர்பட்டியல் ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுள்ளதனால் அவர்களுக்கான நியமன கடிதங்கள் அடுத்த வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனக் கூறினார்.

ஏப்ரல் மாதம் 29 ம் திகதி நியமன கடிதம் வழங்கப்பட்டு அவர்களுக்கான குறுகிய கால பயிற்சிகள் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka