கல்முனை மாவட்ட ஆயுர்வேதே வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் அன்பளிப்பு » Sri Lanka Muslim

கல்முனை மாவட்ட ஆயுர்வேதே வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் அன்பளிப்பு

IMG-20190412-WA0034

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்.என்.எம்.அப்ராஸ்


கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் நோயாளிகளின் பெருக்கத்தின் காரணமாக அங்கு நிலவும் மருத்துவ உபகரணங்களின் தேவைப்பாட்டினை அறிந்து நோயாளிகளுக்கு உன்னத சேவையை வழங்கு முகமாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பானது ஒரு தொகுதி அத்தியாவசிய மருத்துவ உபகரணத் தொகுதியை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளது.

மேற்படி மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று. ( 12)கல்முனை மாவட்ட ஆயுவேத வைத்தியசாலையில் அதன் வைத்திய அத்தியட்சகர் முகம்மது இசாக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராஹீம் உபதலைவர் மௌலவி எம்.சி. அப்துஸ் சமத் உபசெயலாளர் எம்.எம்.முகம்மது காமில், பொருளாளர் நிசாம்தீன் மற்றும் அமைப்பின் ஏனைய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் மேலும் இதில் வைத்தியசாலையின்வைத்தியர்கள் ,ஊழியர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Web Design by The Design Lanka