தொழில் முயற்சியாளர்களுக்கு நவீன மாங்கன்றுகள் வழங்கவுள்ளோம் - அலி ஸாஹிர் மௌலானா. - Sri Lanka Muslim

தொழில் முயற்சியாளர்களுக்கு நவீன மாங்கன்றுகள் வழங்கவுள்ளோம் – அலி ஸாஹிர் மௌலானா.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)


நவீன அடிப்படையிலும் விஞ்ஞான ரீதியாகவும் கொண்ட மாங்கன்றுகளை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களின் தலைமையில் கடந்த (10) ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

எங்களது அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் அதில் ஒரு அங்கமாக நவீன, விஞ்ஞான ரீதியான மாங்கன்றுகளை வழங்கவுள்ளோம்.

அது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குள் காய்க்கத் தொடங்கும் அதன் ஒரு காய் கூடுதல் எடையினைக் கொண்டவையாகக் காணப்படும் .

தொழில் முயற்சியாளர்களுக்கு இவ்வாறான பல நவீன விவசாயம் என்று சொல்லப்படுகின்ற புதிய நவீன விவசாய முறையினால் வாழ்வாதாரத்தை வலுவூட்டல் என்ற அடிப்படையில் வழங்கவுள்ளோம்.

இதில் பயன்பெறக் கூடிய பயனாளிகளை நாங்கள் அடையாளங் கண்டுள்ளோம் அவர்களுக்கு விரைவில் குறித்த மாங்கன்றுகளை வழங்கவுள்ளோம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team