இலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டனில் கைது » Sri Lanka Muslim

இலங்கை பிரஜைகள் நான்கு பேர் லண்டனில் கைது

1555133674-luton-airport-london-2

Contributors
author image

Editorial Team

லண்டன் – லுடன் விமான நிலையயத்தில் வைத்து இலங்கை பிரஜைகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றில் அங்கத்துவம் பெற்றுள்ள சந்தேகத்தில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இவர்கள் சர்வதேச விமானம் ஒன்றின் மூலம் லுடன் விமான நிலையயத்தை வந்தடைந்துள்ளதாக அநந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது கைது செய்யப்பட்ட நால்வரிடமும் அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (அததெரண)

Web Design by The Design Lanka