ஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது » Sri Lanka Muslim

ஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை-இருவர் கைது

beer

Contributors
author image

Farook Sihan - Journalist

சந்தேகத்திற்கிடமாக சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட பொலிஸார் சட்டவிரோதமான முறையில் மறைத்து விற்பனைகாக கொண்டு சென்ற பியர் ரின்களை மீட்டுள்ளனர்.

புது வருடத்தை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் சட்டவிரோதமாக பியர் கடத்தப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் போது சனிக்கிழமை(13) நள்ளிரவு யாழ்ப்பாணம் – நெல்லியடி நகர் ஊடாக பயணித்த குறித்த முச்சக்கர வண்டியில் இருந்த முச்சக்கர வண்டி உரிமையாளர் மற்றும் அதில் இருந்தவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் கைதான நபர்களின் தகவலின்படி அதில் 85 பியர் ரின்கள் மீட்கப்பட்டதாகவும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka