சம்மாந்துறை பிரதேச சபையினால் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் » Sri Lanka Muslim

சம்மாந்துறை பிரதேச சபையினால் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம்

IMG20190415111613

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

தமிழ் சிங்கள புதுவருடத்தின் முக்கொத்து சுபவேளையான 11.17ற்கு பயன்தரு மரக் கன்றுகளை நடும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவான தேசிய வேலைத் திட்டம் சம்மாந்துறை பிரதேச சபை பிரதேசத்திலும் இடம்பெற்றது.

இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம் இன்று சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாட் தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Web Design by The Design Lanka