இன்னும் ஒருசில தினங்களில் திடீர் அரசியல் மாற்றம்! - Sri Lanka Muslim

இன்னும் ஒருசில தினங்களில் திடீர் அரசியல் மாற்றம்!

Contributors
author image

A.S.M. Javid

இலங்கை அரசியலில் இன்னும் ஒருசில தினங்களில் திடீர் அரசியல் மாற்றம் ஒன்றை ஜனாதிபதி ஏற்படுத்தலாம் என்ற ஐதீகம் காணப்படுகின்றது.

தற்போதைய நிலையில் இலங்கையின் அரசியலில் எதிர்வரும் தேர்தல்கள் பற்றிய விடயங்களே அதிகமாக பேசப்படுகின்றன. அது மாகாண சபைத் தேர்தலா? அல்லது ஜனாதிபதித் தேர்தலா? அல்லது பாராளுமன்றத் தேர்தலா? என்பதாகும்.

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருப்பதால் அதனை தற்போது பேச முடியாது. என்றாலும் மாகாண சபைத் தேர்தல் இங்கு முக்கியமானதாகும். பல மாகாண சபைகள் காலம் முடிந்து செயழிழந்துள்ளன. இன்னும் சில கலைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் இத்தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற வாதங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்ற அழுத்தங்களை ஒருசில அரசியல் வாதிகள் கொடுத்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் தேர்தல் வேட்பாளர்கள் யார் என்பது பற்றி ஒவ்வொரு கட்சியினருக்குள்ளும் பலத் போட்டிகளும், இழபறி நிலைமைகளும் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் ஒருசில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எந்த அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் ஜனநாயக நாடு என்ற வகையில் அது அப்பாவி நாட்டு மக்கள் பாதிப்புறாத வகையில், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படுவதே இலங்கைக்கு ஏற்புடையதாகும் எனலாம்.

Web Design by Srilanka Muslims Web Team