கிண்­ணியாவில் ஸ்பிறே மயக்க மருத்து பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது - Sri Lanka Muslim

கிண்­ணியாவில் ஸ்பிறே மயக்க மருத்து பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா நிருபர்


கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த ஓரிரு மாத கால­மாக இடம் பெற்று வந்த இரவு நேர கொள்ளைச் சம்­ப­வங்­க­ளோடு தொடர்­பு­டை ஐவர் அடங்கிய குழுவை நேற்று முன்தினம்  மாலை சீனக் குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிண்ணியாவில் கிரீஸ் மனி­தர்­க­ளாக இருக்­கலாம் என்ற சந்­தேகம் ஏற்­படுத்தி பொது மக்களை அச்சம் கொள்ள செய்து கடந்த ஓரிரு மாத கால­மாக பல் வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தகிக்கப்படுகின்ற கொள்ளைக் கும்பலை, பொது மக்களின் உதவியோடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பெரிய கிண்ணியா , பெரியாற்றுமுனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி திருகோணமலை, ஜமாலியாவை சேர்ந்த தூலான் என்றழைக்கப்படும் நபர் தலைமறவாகியுள்ளதாகவும், இவரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இவர் முன்னர் மின்சார சபையில் மாணி வாசிப்பாளராக கடமையாற்றி இடைநிறுத்தப்பட்டவர். 

கிண்ணியாவிலுள்ள பணக்காரர்கள் யார் என்பதை அறிந்த இவர் இரவு வேளைகளில் இளைஞர்கள் மூலம் பல கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

வீட்டின் ஓட்டைக் கழற்றி விட்டு வீட்­டுக்குள் இறங்கி வீட்டு உரிமையாளர்களுக்கு ஸ்விறே மருந்து விசிறிவிட்டு நகை, பணம், மடிக் கணனி என பல பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக கிண்ணியா பொலிஸாரிடம் முறைப்படுகள் செய்த போதிலும் பொலிஸாரின் அசம்பந்த போகினால் DIG சமன் ஜடவர , ASP புத்திக மானத்தூங்க , IP விதான ஆராய்ச்சி ஆகியோரின் கவணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது இவர்களின் நேரடி கண்காணிப்பில் விஷேட குழுவினரின் உதவியுடன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பலர் இக்கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பிருக்களாம் என பொலிஸார் சந்தேகப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team