18 ஆம் திகதி ஹிஸ்புல்லா அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் - Sri Lanka Muslim

18 ஆம் திகதி ஹிஸ்புல்லா அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

Contributors
author image

M.J.M.சஜீத்

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி அல்-ஹாஜ். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எதிர்வரும் 18 ஆம் திகதியன்று சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் மனிதாபிமான நலன்புரி அமைப்பு திட்டத்தினால் நிறைவு செய்யப்பட்ட பாடசாலை வகுப்பறைக் கட்டிடங்களை கிழக்கு மாகாண ஆளுநரும், அமெரிக்கா தூதுவரும் திறந்து வைக்க உள்ளனர்.

அதேவேளை ஒலூவில் பிரதேசத்திற்கு 18.04.2019 ஆம் திகதி பிற்பகல் 05.00 மணிக்கு விஜயம் செய்து ஒலூவில் கடல் அரிப்பு, பொன்னன்வேளி காணி, விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், பிரதேச கல்வி தொடர்பான கலந்துரையாடலும், அஸ்ரப்நகர் காணி தொடர்பான விடயம், கிழக்கு மாகாண ஆளுநரிடம் பிரதேச மக்கள் முன் வைக்க உள்ளதாகவும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயகல்விப் பணிப்பாளர் றகுமத்துல்லா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் லியாகத் அலி, கல்முனை மீன்பிடி திணைக்கள உயர் அதிகாரிகள், அக்கரைப்பற்று நீர்பாசன பொறியியலாளர் திரு. மயூரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team