இலவச கண் பரிசோதனை முகாம் » Sri Lanka Muslim

இலவச கண் பரிசோதனை முகாம்

1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எச்.எம்.எம்.பர்ஸான்


ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 23 ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இப் பரிசோதனை முகாமில் கண்ணில் வெண்படல நோய் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கான இலவச கண் சத்திர சிகிச்சை புத்தளம் குவைத் வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

குறித்த சத்திர சிகிச்சை பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே குறித்த நோயுடைய சகலரும் இதில் கலந்து கொண்டு பயன்பெற முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1

Web Design by The Design Lanka