திருப்பதியில் ஜனாதிபதி » Sri Lanka Muslim

திருப்பதியில் ஜனாதிபதி

201904171129455399_Srilanka-president-sirisena-swami-darshan-at-tirupati_SECVPF

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

திருப்பதியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா புதன்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய செவ்வாய்கிழமை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா, திருப்பதி உதவி கலெக்டர் மகேஷ்குமார் மற்றும் எஸ்.பி. அன்புராஜன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருமலைக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனா பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் ஓய்வெடுத்தார். பின்னர் ஸ்ரீவாரி பாதத்தை சாமி தரிசனம் செய்தார்.

புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து 6.30 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு லட்டு பிரசாதங்களை வழங்கினர்.

Web Design by The Design Lanka