புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சில காணிகளை புனித பூமி திட்டத்தின் கீழ் அளவிட முயற்சி » Sri Lanka Muslim

புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சில காணிகளை புனித பூமி திட்டத்தின் கீழ் அளவிட முயற்சி

IMG_2166

Contributors
author image

M.T. ஹைதர் அலி - செய்தியாளர்

புல்மோட்டை பிரதேசத்திலுள்ள எமது மக்களின் காணிகளை உள்ளடக்கி கீழ் வரும் பிரதேசங்கள்

01.சாந்திபுர விகாரை
02.கந்தசாமி மலை,தென்னைமறவாடி
03.நாகலென விகாரை
04.அரிசிமலை
05.யான் ஓயா
06.அத்தனாசி
07.மிஹிந்து லேன்
08.சப்த நாக பம்ப
09.மீ சத்தர்ம பிதஹி

போன்ற 09 விகாரைகளுக்கான இடங்களை அளவிட 2013 அளவிட உத்தரவிடப்பட்டும் அளவிட படவில்லை என்றும் நிள அளவை திணைக்களம் இழுத்தடிப்பதாகவும் புல்மோட்டை பௌத்த பிக்கு சில பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களூடாக பாராளுமன்ற விசேட கமிட்டி யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சபா நாயகர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது

ஏலவே இதுவிடயமாக குருவின் தலைமையில் JVP பாராளுமன்ற உறுப்பினர்கள் புல்மோட்டை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு அவர்களாலே பாராளுமன்ற குழுவிற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது

அதனடிப்படையில் 17.04.2017 காலை 10.30 மணியளவில் புல்மோட்டை பகுதிக்குள் பிக்குவின் தலைமையில் நிள அளவை அதிகாரிகள் குச்சவெளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் குறித்த பகுதிகளை இனம் கண்டு அறிக்கை சமர்பிப்பதற்க்காக வருகை தந்துள்ளனர்

இது விடயமாக ஏலவே புனித பூமிக்காக அளவிட முற்பட்ட போது பொது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்திமை குறிப்பிட தக்கது

அரிசிமலை தொடர்பாக திருகோணமலை உயர் நீதி மன்றத்தில் பிரதேச மக்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முடிந்த நிலையில் எதிர்வரும் 16 மே மாதம் 2019 தீர்ப்பளிக்கப்படவுள்ள நிலையில் 07 வழக்காளிகள் பக்கம் தீர்ப்பு கிடைக்ககூடிய உள்ளது இந்நிலையில் குறித்த இன்றைய வருகை எந்த வகையில் நியாயமானது

மேலும் இது விடயமாக எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ்.தௌபீக் அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டு அவற்றுக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்

குறித்த காணி பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் காணி அமைச்சர் கயந்த கருணா திலகே திருமலை மாவட்ட அரசாங்க அதிபர்,காணி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட அதிகாரிகளின் கவனத்திற்கு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது குறிப்பிடதக்கது

பௌத்த விகாரைக்கான காணியை அளவிடுவதில் எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை மாறாக பொது மக்களின் காணிகளை புனித பூமி என்ற போர்வையில் அளவிடுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்

மேலும் இந்த விடயத்தில் அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்

புல்மோட்டை காணி விடயமாக அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அன்வர் சந்தித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை அவரது அமைச்சில் (17) புதன் பி.ப.1.00 மணியளவில் சந்தித்து நிலைமைகளை விளக்கினார்

பின்னர் தொலைபேசியில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைச்சர் உண்மை தன்மையை அதிகாரிகளுக்கு விளக்கினார்

இது விடயமாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ்.தௌபீக் அவர்களுக்கு தொலைபேசி மூலம் உரிய ஏற்பாடுகளை செய்யும்படி அமைச்சர் ரவூப் பணித்தார்.

IMG_2166 IMG_2170

Web Design by The Design Lanka