200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள் » Sri Lanka Muslim

200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள்

mahroof

Contributors
author image

ஊடகப்பிரிவு

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்கு இவ் வருட கம்பரெலிய திட்டத்துக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பத்து பிரதேச செயலகங்களுக்கான சுமார் 603 வேலைத் திட்டங்களுக்காக குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு, கிராமிய அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக கம்பரெலிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka