வாக்குப்பதிவு சரியாக 6 மணிக்கு நிறைவடைந்தது - Sri Lanka Muslim

வாக்குப்பதிவு சரியாக 6 மணிக்கு நிறைவடைந்தது

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மதுரையை தவிர 37 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சரியாக 6 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இதற்கிடையே, மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

“ 5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் வருமாறு:-

வட சென்னை 59
தென் சென்னை 56.71
மத்திய சென்னை 55.74
ஸ்ரீபெரும்புதூர் 58.53
நெல்லை 62.65
கடலூர் 65.82
பொள்ளாச்சி 63.17
சேலம் 66.18
தென்காசி 65.99
திருவண்ணாமலை 65
தர்மபுரி 67.67
விழுப்புரம் 66.52
கன்னியாகுமரி 55.07%
தூத்துக்குடி 62.66
காஞ்சிபுரம் 62.56
அரக்கோணம் 66.27
கள்ளக்குறிச்சி 69.42
தஞ்சாவூர் 66.69
திண்டுக்கல் 62.60
மயிலாடுதுறை 63.94
நீலகிரி 64.69
சிவகங்கை 63.78
தேனி 68.54
ராமநாதபுரம் 63.66
பெரம்பலூர் 67.02
கிருஷ்ணகிரி 65.34
திருச்சி 64.22
விருதுநகர் 64.50
கரூர் 68.52
திருவள்ளூர் 64.08
ஆரணி 76.49
மதுரை 55.22
கோவை 59.98
நாகை 69.21
திருப்பூர் 60
சிதம்பரம் 70.73
நாமக்கல் 65.92
ஈரோடு 66.84
புதுவை 70 % 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிதமபரம் 70.73 சத்வீதமாகவும் குறைந்த பட்சம் கன்னியாகுமரி 55.07 சத்வீதம் பதிவ்பாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என கூறினார்.

தமிழகத்தில் மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள 37 தொகுதிகளிலும் சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டோக்கன் கொடுக்கப்படும் சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் உள்ள கட்டவிளாகம், கீழ்குடி, கள்ளவழியேந்தல், ருத்திரன்பட்டி, இழுப்பைகுடி உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1300 வாக்காளர்கள், கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அழகிய மண்டபம் பிலாங்காலை பகுதியில் உள்ள 157-வது வாக்குச்சாவடியில் கல்லுவிளைப் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவர் வாக்களிக்க வந்தபோது அவரது ஓட்டு பதிவானதாக தேர்தல் அதிகாரி கூறியதால் அதிர்ச்சியடைந்த அஜின் வாக்களிக்க முடியாமல் தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறினார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த 60 வயது முதியவர் முருகேசன் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

தமிழகத்தில் தற்போது விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீலகிரி தனித் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், முதியோர் பலர் வாக்களிப்பது எப்படி என்பது தெரியாமல் தவித்தனர். அவர்களுக்கு வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உதவினர்.

தமிழ்நாடு (38), தவிர்த்து கர்நாடகா (14), மகாராஷ்டிரா (10), உத்தரப்பிரதேசம் (8), அஸ்ஸாம் (5), பீகார் (5), ஒடிஷா (5), சட்டீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), ஜம்மு காஷ்மீர் (2), மணிப்பூர்(1) ஆகிய மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் (1) வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடுமுழுவதும் 95 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது

Web Design by Srilanka Muslims Web Team