முஸ்லிம் சமூகத்தின் திருப்புமுனையைக் குறிக்கும் தேசிய மாநாடு கொழும்பில் » Sri Lanka Muslim

முஸ்லிம் சமூகத்தின் திருப்புமுனையைக் குறிக்கும் தேசிய மாநாடு கொழும்பில்

muslims

Contributors
author image

Hasfar A Haleem

இலங்கையின் பெருமைக்குரிய குடிமக்களான முஸ்லிம் சமூகம், வரலாறு தொட்டு தற்காலம் வரை நாட்டு நலனுக்காக தனித்துவமான பங்களிப்புகளை மேற்கொள்ளும் சமூகமொன்றாகும்.

இலங்கை முஸ்லீம் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் முஸ்லீம் சமூகத்தின் திருப்பு முனையைக் குறிக்கும் தேசிய மாநாடு கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர் வரும் 29 ம் திகதி மாலை 3.30 மணிக்கு இடம் பெறவுள்ளதாக அமைப்பின் தலைவரும் தேசிய அமைப்பாளருமான ஹஸன் அலால்தீன் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்

தற்கால சமூகத்தில் முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் இருந்த தொடர்புகள் தளர்ந்து தாய் நாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகளை விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் போக்கை நீண்ட காலமாக நடத்தப்பட்ட மேற்பார்வையொன்றின் முடிவாக எமக்கு உறுதியாகியூள்ளது.

இருளை சபிக்காது, முதல் படி வைத்து நாம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களைப் போன்றே மனிதக் கடமைமொன்று முன்னெப்போதும் இல்லாத விதத்தில் இந்நேரம் உருவாகி வருகின்றதை எமது அமைப்பு நம்புகின்றது.

உடனடிக் காரணியாக இன்றளவில் எமது இராணுவ வீரர்கள் ஜெனீவாவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். LTTEயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களாகிய நாம் இப்போது அந்த குற்றத்துக்கான முன்னிற்கக் கூடாதா?

சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய அனைத்து இனங்களையூம் ஒன்றிணைத்து இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப எமக்கு இருந்த தங்கமான வாய்ப்பு எம்மிலிருந்து கை நழுவியதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

தாயகத்தை விரும்பும் இலங்கை இனமொன்று, பெருமைக்குரிய இலங்கை முஸ்லிம் சமூகமும், முஸ்லிம்களின் தனித்துவத்தைப் போன்றே பாதுகாப்பையூம் உறுதிப்படுத்தல் மற்றும் யூத்த வீரர்களுடன் நிபந்தனைகளின்றி கைகோர்க்கும் முஸ்லிம் சமூகமொன்றை உருவாக்கும் அடிப்படை குறிக்கோளை நாம் ஒரே நோக்கமாகக் கொண்டு அதற்காக முன்னணியெடுக்க இலங்கை முஸ்லிம் தேசிய அமைப்பு மேற்கொள்ளும் இந்த பாரிய முயற்சிக்கு சங்கைக்குரிய மதகுரு/ உங்களது வருகையை கௌரவமாக அழைக்கிறோம் .

இம் மாநாட்டில் முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான ரோஹிதபோகொல்லாகம, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உட்பட வெளிநாட்டுத் தூதுவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியலாளர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Web Design by The Design Lanka