ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீனவத் தொழிலை செய்ய நடவடிக்கை - Sri Lanka Muslim

ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீனவத் தொழிலை செய்ய நடவடிக்கை

Contributors
author image

Hasfar A Haleem

ஒலுவில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் ஒலுவில் துறை முகத்தினுள் மீனவர்களது போக்குவரத்துக்கு தடையாக இருந்த இடங்களுக்கான தடை நீக்க நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான ஆரம்ப கட்ட வேலைத் திட்டங்களை பிரதி அமைச்சர் நேற்று (19) குறித்த துறை முகத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

மீனவர்களின் வேண்டுகோளிற்கிணங்க துறை முக வளாகத்தினுள் தடைப்பட்ட போக்குவரத்துக்காக மண்களை அகற்றுவதுடன் உரிய வழி வகைகளை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team