புதிய ஜும்ஆ பள்ளி திறந்து வைப்பு - Sri Lanka Muslim
Contributors
author image

Hasfar A Haleem

குவைட் நாட்டின் நிதி உதவியின் கீழ் மண்முனைப் பற்று பகுதியில் புதிய ஜும்ஆ பள்ளி வாயல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

குறித்த கட்டிடமானது  வெள்ளிக் கிழமை குவைட் நாட்டின் டகாதுத் பவுண்டேசன் மற்றும் மனித அபிவிருத்தி அமைப்பின் பிரதிநிதி கலாநிதி மன்சூர் ஜப்பார் அவர்களினால் உத்தியோகபூர்வமாக நாடாவை வெட்டி திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

பள்ளிவாயலை திறந்து முதலாவது ஜூம்ஆ பிரசங்கமும் நிகழ்த்தப்பட்டது. பிரதி அமைச்சரால் குவைட் நாட்டு பிரதிநிதிக்கு நினைவுச் சின்னமும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் , மௌலவி மர்ஜான், பிரதேச மக்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team