மட்டக்களப்பில் 27பேர்: கொழும்பில் 48பேர் மரணம்: பொதுமக்களை பாதுகாப்புத் தரப்பு எச்சரிக்கை - Sri Lanka Muslim

மட்டக்களப்பில் 27பேர்: கொழும்பில் 48பேர் மரணம்: பொதுமக்களை பாதுகாப்புத் தரப்பு எச்சரிக்கை

Contributors
author image

Editorial Team

இன்று காலை இடம்பெற்ற தொடர் ஆறு குண்டுவெடிப்பில் இதுவரை பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பொதுமக்களும் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 48பேர்களும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை இடம்பெற்ற ஆறு குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கணக்கானவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரை சுமார் 100பேர் அளவில் உயிரிழந்திருக்கலாம் என அரசாங்க பத்திரிகையில் கடமை புரியும் ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

மேலும் சம்பங்கள் இடம்பெற்ற இடங்களில் பொதுமக்கள் கூடுவதை நிறுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு குண்டுவெடிப்பு புகைப்படம்

57360315_2254355228111723_1112851517024501760_n 57486075_2254355194778393_2588152459415257088_n 57486225_2254355151445064_1795063903277809664_n 57614999_2254355114778401_5265466807807901696_n

Web Design by Srilanka Muslims Web Team