சமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது - » Sri Lanka Muslim

சமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது –

_DSC0572

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

.

(எச்.எம்.எம்.பர்ஸான்)


எமது பிரதேசம் கல்வி ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருகிறது என்பதனை கடந்தகால அறுவடைகள் எமக்கு தெளிவாக கூறிக்கொண்டிருக்கின்றன. இந்த சமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியின் எழுச்சியிலேயே தங்கியிருக்கிறது என்பதை நாங்கள் யாருமே மறந்துவிட முடியாது. என கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக காலாசார உத்தியோகத்தரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவருமான ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி தெரிவித்தார்.

கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் அனைத்துப் பாடங்களிலும் ஒன்பது ஏ சித்தி பெற்ற மாணவர்களை அண்மையில் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,

இந்த சமுதாயம் கல்வியில் எழுச்சிபெற்ற காலமெல்லாம் அது இந்த உலகத்தை ஆட்சி செய்கின்ற, ஆளுகின்ற பரம்பரையாக இருந்து வந்தது. எப்போது தனது சாதனைகளை கைவிட்டு அவற்றிலிருந்து தூரமாகி பிற சமுகங்களின் சாதனைகளை மெச்சுகின்ற அடிப்படையில் இந்த சமுதாயம் தன்னுடைய வழியை அமைத்துக்கொண்டதோ அன்றே அது வீழ்ச்சியை நோக்கி பயணித்தது என்பதுதான் கடந்த கால வராலாறுகள் நமக்குச் சொல்லுகின்ற பாடமாகும்.

அந்தவகையில் கல்வியின் எழுச்சியை நோக்கி பயணப்படுகின்ற எங்களது மாணவர் சமுகத்தையும், இளைஞசர் சமுதாயத்தையும் தட்டிக் கொடுத்து அவர்களை உயர்த்திவிட்டு எதிர்கால சமுதாயத்தின் புத்திஜீவிகளாக, கல்விமான்களாக இந்த சமுதாயத்தின் முதுகெலும்புகளாக மாற்றவேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் சமுகத்தின் தலைமைத்துவங்கள், பொறுப்பிலிருகின்றவர்கள் அனைவர்கள் மீதும் கடமையாக இருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரைக்கும் அது கல்வியை தன்னுடைய மூலதனமாக கொண்ட மார்க்கமாகும் அதனுடைய வளர்ச்சியில் முக்கியமான பங்கு கல்விக்குத்தான் இருக்கின்றது இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அருளப்பட்ட முதலாவது வசனம் படைத்த உமது இரட்சகனின் பெயரால் ஓதுவீராக, படிப்பீராக என்று ஆரம்பமானதை நாங்கள் பார்க்கின்றோம்.

நபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் சார்ந்த சமுதாயத்தை நோக்கி பல்வேறு பொறுப்புக்கள், கடமைகள் இருந்தன அறியாமைக்காலத்தில் இருந்த அந்த சமுதாயம் கொள்கை ரீதியான, பண்பாட்டு ரீதியான, குடும்ப வாழ்வியல் ரீதியான, தொழில்சார் முயற்ச்சிகள் ரீதியான எல்லா அம்சங்களிலும் அதலபாதாளத்திலே இருந்தது அந்த சமுதாயத்தை மீட்டெடுப்பதற்காக, அந்த சமுதாயத்தை இருளில் இருந்து ஒளியின் வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்வதற்காக தேர்வு செய்யப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹுத்தாலா சொன்ன முதலாவது செய்தி படியுங்கள் என்பதுதான் படைத்த உமது இரட்சகனின் பெயரால் படியுங்கள் என்று சொன்னதுதான் நபிக்கு இறைவன் சொன்ன முதலாவது செய்தியாகும். அதனுடைய அர்த்தம் என்னவென்றால் இந்த சமுகத்தில் இருக்கின்ற புரையோடிப்போயிருக்கின்ற அத்தனை அறியாமைலிருந்தும் இந்த சமுதாயத்தை மீட்டெடுப்பதற்கான பிரதான மூலதனம் கல்விதான் படிப்பதனூடாக இந்த சமுதாயத்தின் கொள்கையை மாற்றியமைக்க முடியும், படிப்பதனூடாக இந்த சமுதாயத்தின் பண்பாட்டை மாற்றியமைக்க முடியும், படிப்பதனூடாக இந்த சமுதாயத்தின் வாழ்வியல் அம்சங்களை மாற்றியமைக்க முடியும் என்றவொரு பிரதானமான நோக்காகக் கொண்டு அல்லாஹ் அறிவுரையை வழங்கியதைப் நாம் பார்க்கின்றோம்.

எனவே எப்போது படியுங்கள் என்று சொல்லி இந்த இஸ்லாமியப் பணி ஆரம்பமானதோ அதிலிருந்து எப்போதெல்லாம் இந்த முஸ்லிம் சமுதாயம் படிக்கின்ற சமுதாயமாக, கல்விச் சமுதாயமாக இருந்ததோ அப்போதெல்லாம் இந்தவுலகை வழி நடாத்துகின்ற, இந்தவுலகத்தை ஆளுகின்ற, இந்த உலகத்தை நிருவகிக்கின்ற பொறுப்பு அவர்களுடைய கைகளிலேயே இருந்தது என்பதுதான் நம்முடைய முன் வராலாறுகள் நமக்குச் சொல்லித்தருகின்ற பாடமாகும். இடைக் காலங்களில் முஸ்லிம் சமுதாயம், முஸ்லிம் உம்மத் வீழ்ச்சியடைந்தது என்றால், அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது என்றால் அதற்கு அடிப்படையான காரணம் இந்தக் கல்விச் சிந்தனைலிருந்து, இந்த அறிவுச் சிந்தனையிலிலிருந்து முஸ்லிம் உம்மத் வீழ்ச்சியடைந்த போது, தூரமான போது வெறும் உலகாயுதத்தை அடிப்படையாகக்கொண்டு உலகத்தின் அற்பசொற்ப லாபங்களுக்காக, பட்டம் பதவிகளுக்காக போட்டியிட்டுக் கொண்ட போது அவர்களிடமிருந்த எல்லா அம்சங்களும் கைநழுவிப் போன ஒரு துர்ப்பாக்கியமான சூல்நிலையப் பார்க்கின்றோம்.

எனவே இந்த சமுதாயத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமாகவிருந்தால் நாங்கள் இந்தக் கல்விக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம்தான் இந்த சமூதாயத்துடைய எதிர்கால எழுச்சியையும், முன்னேற்றத்தையும் கட்டியம் கூறக்கூடியதாக இருக்கும் அந்த வகையில் எங்களுடைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் கடந்த ஒரு தசாப்தத்திக்கு மேலாக கல்வி ரீதியாக காட்டிவந்த அக்கறை, மிகப்பெரிய சாதனைகள், தேசிய மட்டத்தில் பேசப்படுகின்ற சாதனைகள், அவர்களுடைய எழுச்சியை நோக்கிய பயணத்துக்கான வழிகாட்டியாக அமைந்திருப்பதைப் பார்க்கின்றோம்.

ஆகவே இந்தக் கல்வி முன்னேற்றம், கல்வி எழுச்சி ஆகியவை வெருமெனவே சடவாத ரீதியான, பௌதீக ரீதியான முன்னேற்றமாக மட்டும் அமைந்துவிடக் கூடாது கல்வி எழுச்சி பண்பாட்டிலும், ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் முனேற்றத்தைத் தருகின்ற மாற்றத்தைத் தருகின்ற, அபிவிருத்தியைத் தருகின்ற முனேற்றமாக இருக்க வேண்டுமென்று இஸ்லாமிய மார்க்கம் எதிர்பாக்கின்றது எனத் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka