நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் » Sri Lanka Muslim

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்

susma

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

இலங்கை குண்டுவெடிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட் செய்துள்ளார். மேலும் அங்கிருக்கும் இந்தியர்களுக்காக தற்போது உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொழும்பில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ‘5 ஸ்டார்’ ஓட்டல்களில் ஞாயிற்றுக்கிழமை காலை அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறார்.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ள அறிக்கையில் அதேபோல் அங்கு இருக்கும் இந்தியர்கள் உதவிகளை பெறுவதற்காக தற்போது இந்திய வெளியுறவுத்துறை சார்பாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையில் தூதரக உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் தொடர்பு கொள்ள வசதியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ‘‘இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நான் தொடர்ந்து பேசி அங்குள்ள சூழ்நிலையை குறித்து கேட்டு வருகிறேன். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’’இலங்கையில் உள்ள இந்தியர்கள் +94777903082, +94112422788, +94112422789, +94777902082, +94772234176 ஆகிய அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சாதிக் கலவரத்தை தூண்டுவோர் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மதுரையில் வாக்கு இயந்திர அறைக்குள் அனுமதியின்றி அதிகாரி சென்றது பற்றி விசாரண நடத்த வேண்டும்.

பெண் வட்டாட்சியரை ஆளுங்கட்சி அனுப்பி வைத்தது போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகின்றன. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது. அங்கு அமைதி திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Web Design by The Design Lanka