வெளிநாடு செல்லும் பயணிகள் நான்கு மணித்தியாலத்திற்கு முன்னராக விமான நிலையத்திற்கு வருமாறு வேண்டுகோள் - Sri Lanka Muslim

வெளிநாடு செல்லும் பயணிகள் நான்கு மணித்தியாலத்திற்கு முன்னராக விமான நிலையத்திற்கு வருமாறு வேண்டுகோள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


கொழும்பிலும் நாட்டின் பல இடங்களிலும் நேற்றுக் காலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, வெளிநாட்டிற்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் நான்கு மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு சமூகந்தருமாறு, விமான நிலைய அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்கள் எவருக்கும் விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையதின் பாதுகாப்பு தற்போது
பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team