தாக்குதலுக்கு பின்னர் ஏற்படவுள்ள இனவாத அரசியலை கட்டுபடுத்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது » Sri Lanka Muslim

தாக்குதலுக்கு பின்னர் ஏற்படவுள்ள இனவாத அரசியலை கட்டுபடுத்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது

IMRAN

Contributors
author image

ஊடகப்பிரிவு

இன்று இடம்பெற்ற மிலேத்சதத்னமான தீவிரவாத தாக்குதலை அடுத்து ஏற்படவுள்ள இனவாத அரசியலை கட்டுபடுத்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

இன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பிரபல ஹோட்டல்களிலும் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிறிஸ்தவ சகோதரர்களின் புனித ஈஸ்டர் திருநாளில் அவர்கள் தமது வழிபாடுகளை மேற்கொண்ட சந்தர்பத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கும் எமது நாட்டுக்கு விருந்தாளிகளாக வந்து உயிரிழந்த,காயமடைந்த வெளிநாட்டு பயணிகளின் குடும்பத்தினருக்கும் முதலில் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சூத்திரவாதிகள் மட்டுமல்லாமல் அவர்களை இயக்கிய முக்கியஸ்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பற்றிய முழு விபரமும் மக்கள் முன் தெளிவுபடுத்துவதோடு அவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் இந்த தாக்குதலை அடுத்து சிலரால் மேற்கொள்ளப்படவுள்ள இனவாத அரசியலை கட்டுபடுத்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு முன் உள்ளது. இதை எமது அரசு செய்ய தவறும்பட்சத்தில் எதிர்காலத்தில் இதை விட பாரிய அழிவுகளை எமது நாடு எதிர்கொள்ள நேரிடும்.

ஆகவே எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் இருந்து விடுபட இன,மத,பிரதேச ,அரசியல் வேறுபாடுகளை மறந்து இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்.

ஊடகப்பிரிவு.

Web Design by The Design Lanka