அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்படக் கூடாது - Sri Lanka Muslim

அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்படக் கூடாது

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கையில் பொதுமக்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. 
எனினும் இத் தாக்குதல்களுக்கு காரணமில்லாத எந்த ஒருவரும், குறித்த ஒரு மதத்தை பின்பற்றுபவர்கள் என்பதற்காக இத் தாக்குதல்களை காரணம் காட்டி எவ்வித தண்டனைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் ஆளாக்கப்படக் கூடாது.
முஸ்லீம் சமூக அமைப்புகள், அரசியல்வாதிகள் எவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றீர்களோ, அதே போல் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்பதனையும் வலியுறுத்த வேண்டும்.
இலங்கை வாழ் மக்கள் என்ற வகையில் இம் மாபெரும் துயரம் எல்லா மதத்தவர்களையும் பாதித்திருக்கின்றது. ஏதோ ஒரு குழு செய்ததாக சந்தேகிப்பதானது, இலங்கையின் ஓர் அங்கமாக வாழும் ஒரு மதத்தை, ஒரு இனத்தை மொத்தமாக சந்தேகிப்பதாக அமைந்துவிடக் கூடாது.
அந்த வகையில், சந்தேகத்தின் பேரில் இன்று கொழும்பில் கைது செய்யப்பட்ட கல்வி கற்பதற்காக கொழும்பில் தங்கியிருந்த அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை விடுதலை செய்யுங்கள்; உண்மையான குற்றவாளிகளை, அவர்களுக்கு உதவியவர்களை கைது செய்து அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுங்கள்.
*அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்பட்ட ஒரு சிலருக்காக அமெரிக்காவில் வாழ்ந்த பல்லாயிரம் முஸ்லீம்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட அநீதி எமது நாட்டிலும் அரங்கேறிவிடக்கூடாது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களுடைய கண்ணீரையும், ஆழ்ந்த அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team