நரேந்திர மோடி ஜனாதிபதியுடன் தொலைபேசியில் முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு - Sri Lanka Muslim

நரேந்திர மோடி ஜனாதிபதியுடன் தொலைபேசியில் முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு

Contributors
author image

Presidential Media Division

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார்.

இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதி அவர்களிடம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள இந்திய பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team