காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிராக போராட்டம்) » Sri Lanka Muslim

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிராக போராட்டம்)

DSC_0614

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

காணாமல்போனோர் அலுவலகத்தின் சந்திப்பு
திருகோணமலை மாவட்டத்தில் இன்று (13) நடைபெற்று வருகின்றது.

யுத்த காலங்களில் வட-கிழக்கு பகுதிகளில் காணமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் காணாமல்போனோர் அலுவலகமானது தனது ஆரம்ப சந்திப்புகளை கடந்த மே மாதம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குமூலங்களுக்கு இன்றும் சிறந்த தீர்வு கிடைக்காத பட்ஷத்தில் இன்றைய தினம் இடம் பெற்று வருகின்ற வாக்குமூலமும் போலியானது எனவும் இதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகளில் சிலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கூட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற நிலையில் திருகோணமலை கண்டி பிரதான வீதியிலுள்ள இந்து கலாச்சார மண்டபத்திற்கு முன்னால் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாலும் காணாமல் போனோர் அலுவலக வாக்குகளை பெற்றுக்கொள்ளும் இடத்தை சூழவுள்ள பிரசேத்திலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ள

Web Design by The Design Lanka