குண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்! - Sri Lanka Muslim

குண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்!

Contributors
author image

Editorial Team

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார்.

உயிரிழந்த குறித்த இளைஞனின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நேற்று (22.04.2019) நடைபெற்றது.

இறுதிக்கிரியையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா , வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்து கொண்டு உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அரசாங்க இழப்பிடான ஒரு லட்சம் ரூபாவினை வழங்கி வைத்தனர்.

குறித்த இளைஞனின் இறுதிக்கிரியையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின் , வவுனியா நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமி , பொலிஸார் , கிராமசேவையாளர் , இளைஞர்கள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

FB_IMG_1555956436313

Web Design by Srilanka Muslims Web Team