தலைவர் அஷ்ரபின் மருமகன் கைது வதந்தி என குடும்பத்தார் உறுதிப்படுத்துகின்றனர் » Sri Lanka Muslim

தலைவர் அஷ்ரபின் மருமகன் கைது வதந்தி என குடும்பத்தார் உறுதிப்படுத்துகின்றனர்

Contributors
author image

Editorial Team

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து தீவிர அடிப்படைவாத சிந்தனை கொண்ட மருதமுனையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மருமகன்களில் ஒருவர் என்றும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

குறித்த எமது செய்தியில் அஷ்ரபின் மருமகன் தொடர்பில் அவரது கைது குறித்து ஊர்ஜீதமற்ற நிலை காணப்படுவதாகவும் ஒருவேளை இது விஷமிகளால் பரப்பப்படுவதாக இருக்கலாம் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இதற்கமைய அஷ்ரபின் மருமகனின் குடும்பத்தினர், ‘இந்தச் செய்தி தவறானது. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றோம். ஊர்ஜீதப்படுத்தப்படாத இந்த வதந்தியால் மன வேதனை அடைகின்றோம்’ என எமது இணையத்தளத்திற்கு உத்தியோகபூர்வமாக இன்று காலை அறிவித்துள்ளனர் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

Web Design by The Design Lanka