வடபுல வாழ்வியல் மீள் எழுச்சி நூலின் மறு வெளியீட்டு விழா அக்கரைப்பற்றில் » Sri Lanka Muslim

வடபுல வாழ்வியல் மீள் எழுச்சி நூலின் மறு வெளியீட்டு விழா அக்கரைப்பற்றில்

8eff89b1-1adf-41c1-927d-9f31341707e0

Contributors
author image

அஸீம் கிலாப்தீன்

பத்திரிகையாளர் சுஐப் எம் .காசிம் எழுதிய “வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்” என்ற நூலின் அறிமுக விழா எதிர்வரும் திங்கட் கிழமை23 ம் திகதி மாலை 4;00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதி , ரி .எப் .சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .

அஷ்ஷெய்க் எஸ் .எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை ,கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொள்கின்றார்.

கெளரவ அதிதிகளாக வேதாந்தி சேகு இஸ்ஸதீன் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி ஹசன் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் , ஏ .எல் .எம். நசீர் கலாநிதி எம் எஸ் எம் இஸ்மாயில்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிரபைட் நிறுவன தலைவருமான எம் .ஏ .அப்துல் மஜீத் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம் .எஸ் .உதுமாலெவ்வை ,கே .எம் .அப்துல் ரசாக் , எம்.ஏ .எம் .அமீர் , ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம். தாஹிர் , அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எச் .எம் .அப்துல் லத்தீப்,ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பிரதி தலைவர் நசார் ஹாஜி , மாகாண சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் ஏ .எல் .பரீத் , நீர்வழங்கல் சபை பிராந்திய முகாமையாளர் ஜே .அப்துல் கரீம் , இறக்காமம் பிரதேச சபை உபதவிசாளர் ஏ .எல் நெளபர் நளீமி , அசோக் லேலன்ட;; நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் மாநகர சபை மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளருமான அன்ஸில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்கின்றனர் .

நூலின் முதற் பிரதியை தொழில் அதிபர் எம்.ஜே.எம்.ஜெரின் பெற்றுக்கொள்கின்றார்.அறிமுக உரையை கவிஞர் ரி.எல். ஜெளபர்கானும், வாழ்த்துரையை கவிஞர் கால்தீனும், நன்றியுரையை ஜுனைதீன் மான்குட்டியும் நிகழ்ச்சி தொகுப்பை பிறை எப் எம் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூமும் நிகழ்த்துகின்றனர் . இந்த நிகழ்வில் மூத்த உலமாக்கள்,கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடக வியலாளர்கள் பங்கேற்கின்றனர்.

8eff89b1-1adf-41c1-927d-9f31341707e0

Web Design by The Design Lanka