யாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் - Sri Lanka Muslim

யாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம்

Contributors
author image

Farook Sihan - Journalist

யாழ் குடாநாட்டு பகுதிகளில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

இன்று(23) காலை புதிய சோனகத்தெரு செம்மாதரு முஸ்லீம் கல்லூரி வீதி பொம்மைவெளி அராலி ஐந்து சந்தி பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காகவும் அதில் காயமடைந்துள்ளவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாகவும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

அத்துடன் மேற்படி பகுதிகளில் அநேகமான கடைகள் பூட்டப்பட்டு அனுதாப வாசகங்கள் அடங்கிய பதாதைகள் சந்திக்கு சந்தி தொங்கவிடப்பட்டிருந்தது.

இப்பதாதைகளில் யாழ் முஸ்லீம் சமூகம் என்ற பெயரில் யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜமியத்துல் உலமா சபை யாழ் பள்ளிவாசல்கள் நிர்வாக சபை என்பவற்றின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன.

IMG_7584 IMG_7613

Web Design by Srilanka Muslims Web Team