மண்வாசனை நூல் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் வெளியீடு! » Sri Lanka Muslim

மண்வாசனை நூல் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் வெளியீடு!

book

Contributors
author image

S.Ashraff Khan

கிழக்கு மாகாணத்துக்குரிய கிராமிய வட்டார வழக்குச் சொற்களைத் தாங்கிய, கமர் றிழா எழுதிய “மண்வாசனை“ என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2018. 07. 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கல்முனை ஸாஹிறா கல்லூரியின் எம். எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அருகிவரும் உறவுகளையே மறந்துவிடும் இன்றைய சூழ்நிலையில், மருகிவரும் சொற்கள் வருங்கால சந்ததிக்கும் கிடைக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகவே இந்த நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

இது இந்நூலாசிரியர் கமர் றிழாவின் இரண்டாவது படைப்பாகும். தாதி உத்தியோகத்தராய் கால் பதித்து, இன்று முழு இலங்கையிலும் முதலாவது முஸ்லிம் தாதிய போதனாசிரியராக திகழும் இந் நூலாசிரியர் தனது இரண்டாவது நூலை படைத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

இந்நூலாசிரியரின் முதலாவது கன்னிப் படைப்பான “புற்றுநோயும் நாமும்“ என்ற நூலானது காலத்துக்குத் தேவையான மிகவும் பயனுள்ள நூலாக வெளிவந்தது.

இந்நூலினை 2013ம் ஆண்டு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையினால் வெளியிட்டு வைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நூல் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka