கொழும்பு முகத்துவாரத்தில் 21 கைக்குண்டுகள்; மூவர் கைது - Sri Lanka Muslim

கொழும்பு முகத்துவாரத்தில் 21 கைக்குண்டுகள்; மூவர் கைது

Contributors
author image

Editorial Team

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் வெடிபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று பகல் முகத்துவாரம் பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 6 வாள்களும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட 21 கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team