காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு - Sri Lanka Muslim

காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு

Contributors
author image

Junaid M. Fahath

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் சில பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்கள் தெறிவித்து கடந்த மூன்று நாட்கள் வர்த்தக நிலையங்கள் மூடி துக்கம் அனுஸ்திக்கப்படது.

இருப்பினும் வியாழக்கிழமை (25) காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மக்களின் நடமாட்டமும் வியாபார நடவடிக்கைகளும் வழமை நிலை போன்றே காணப்படுகிறது.

அத்துடன் அரச நிறுவனங்கள், தனியார் வங்கிகள், பொது நூலகங்கள் என அனைத்தும் வழமை போன்றே இயங்கிவருகிறது.

அத்துடன் காத்தான்குடி பிரதேசம் முழுவதும் பள்ளிவாயல்கள், பாடசாலைகள், பொது இடங்களில் இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுல்லதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team