சஹ்ரான் காசிம் பலி" - ராணுவ உளவு இயக்குநர் - Sri Lanka Muslim

சஹ்ரான் காசிம் பலி” – ராணுவ உளவு இயக்குநர்

Contributors
author image

BBC

இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய சஹ்ரான் காசிம் ஷாங்ரி லா குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்று இலங்கை ராணுவ உளவுப் பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் அஸாம் அமீன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு

பள்ளிவாசல்களை தாக்க திட்டம் – தொழுகைக்கு செல்வதை தவிர்க்க இலங்கை போலீசார் கோரிக்கை

இலங்கையில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக பிரதி போலீஸ் மாஅதிபர் பியந்த ஜயகொடியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசார் எச்சரிக்கைபடத்தின் காப்புரிமைJEWEL SAMAD

இனவாத கருத்துக்களை கொண்ட மொஹமட் காசிம் சஹரானினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களின் ஒரு கட்டமாகவே பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டது குறித்து நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குப்பு பள்ளிவாசல் என்றழைக்கப்படும் பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் நீத்த இஸ்லாமிய தலைவர்களை நினைவு கூறும் வகையிலான இந்த பள்ளிவாசலின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வெள்ளிக்கிழமையன்று ஜும்மா தொழுகைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலிம், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகோப்புப்படம்

இந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு இலங்கையில் பல இடங்களில் தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் முஸ்லிம்கள் உள்ளதாக சில செய்திகள் தெரிவித்தன.

நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அஹமதியா முஸ்லிம்கள் அச்சத்தின் காரணமாக அங்குள்ள மசூதி ஒன்றில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team