சாய்ந்தமருதில் 15 சடலங்கள் கண்டெடுப்பு: வேன், பணம் ஆயுதங்கள் மீட்பு - Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் 15 சடலங்கள் கண்டெடுப்பு: வேன், பணம் ஆயுதங்கள் மீட்பு

Contributors
author image

Editorial Team

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சண்டை இடம்பெற்ற இடத்தில் இருந்து 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

06 ஆண்கள், 03பெண்கள், 06 குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான வீடு,வாகனம் மற்றும் ஆள் நடமாட்டம் தொடர்பில் பொதுமக்கள் சிலர் விசாரிக்க முற்பட்டவேளை அங்கிருந்த IS தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது!

விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது தீவிரவாதிகளில் இருவர் புத்தம் புதிய வேனுக்குள் இருந்து தாக்குதல் நடத்தியவாறே தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

பதிவு செய்யப்படாத புத்தம் புதிய வேன் கடந்த 19 ஆம் திகதி அக்கரைப்பற்றில் பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது!

NTJ தலைவன் ஸஹ்ரானின் சகோதரன் நியாஸ் என்பவனே குறித்த வேனை கொள்வனவு செய்திருந்தார்.

தற்கொலைதாரிகள் மேலும் உள்ளே இருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

FB_IMG_1556331880620 FB_IMG_1556331906072 FB_IMG_1556332209985 FB_IMG_1556332213499 FB_IMG_1556332219931

Web Design by Srilanka Muslims Web Team