தலைநகர் வெறிச்சோடியது! - Sri Lanka Muslim
Contributors
author image

A.S.M. Javid

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம் பெற்றிருந்த தீவிரவாத தாக்குதலையடுத்து இன்று வரை சுமுக நிலைமைகள் அவ்வளவாக ஏற்படவில்லை. நகரப் புறங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை குண்டுத்தாக்குதல் இடம் பெற்று இன்றுடன்; ஒருவார காலமாகின்றது. இவ்வாறான நிலையில் இன்று தலைநகர் கொழும்பில் நாளாந்தம் மக்கள் செறிந்து காணப்படும் பல இடங்கள் கடந்த சில தினங்களைவிட இன்று அறவே நடமாட்டம் இல்லாத நிலைமைகளைக் காணக்கூடியதாக உள்ளது.

கொழும்பு புறக்கோட்டையின் பிரதான வீதிகள், புறக்கோட்டை பேரூந்து நிலையம், லேக்கவுஸ் சுற்று வட்டம் உள்ளிட்ட பல இடங்களில்; மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை. அத்துடன் அரச, தனியார் பேருந்து நிலையங்ளில் பயனிகள் பேரூந்துகள் இருந்தும் பயனிக்க மக்கள் இல்லாத காரணத்தினால் பேரூந்துகள் நீண்ட நேரம் தரிப்பிடங்களில் நீண்ட வரிசைகளில் நின்று தாமதமாகவே செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. கொழும்பு பிரதான புகையிர நிலையத்தில் பயணிகள் இன்றி வெளிச்சோடிக் கிடப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

தலைநகர் பகுதிகளில் புறக்கோட்டை பிரதான வீதியுட்பட பல இடங்களில் ஒருசில கடைகளே இன்று திறந்திருந்தன வர்த்தகர்களும், மக்களும் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு தமது அனுதாபங்களை தெரிவித்து பல இடங்களிலும் கறுப்பு, வெள்ளைக் கொடிகளையும், அனுதாப பதாதைகளும் பறக்கவிட்டுள்ளனர். இதேவேளை சமயத் தளங்களிலும் அனுதாப பதாதைகள் பறக்க விடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை சகல இடங்களிலும் முப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதையும், பொலியாரினால் புறக்கோட்டைப் பகுதியில் தேவையற்ற வகையில் வீதியோரங்களிலும், வியாபாரஸ்தளங்களுக்கு அருகாமையிலும் மரப் பலகைகளாலும், பெட்டிகளாலும் போடப்பட்டுள்ள சிறு கடைகள், வீதியோரத் தட்டுக்களும் அகற்றப்படவதையும் அவதானிக்க முடிகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team