சிலோன் மீடியா போரத்தின் 'தென்கிழக்கு கடலோர மே தினம்' நிகழ்வுகள் ரத்து - Sri Lanka Muslim

சிலோன் மீடியா போரத்தின் ‘தென்கிழக்கு கடலோர மே தினம்’ நிகழ்வுகள் ரத்து

Contributors
author image

S.Ashraff Khan

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு மூன்று மீனவ சங்கங்களின் பங்குபற்றலுடன் இன்று மே (01) புதன்கிழமை இடம்பெறவிருந்த ‘தென்கிழக்கு கடலோர மே தினம்’ நிகழ்வு நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று மே 01 தொழிலாளர் தினத்தை இம்முறை சாய்ந்தமருது, மாளிகைக்காடு மீனவ சமூகத்துடன் இணைந்து சிலோன் மீடியா போரம் தென்கிழக்கு கடலோரம் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் கொண்டாடும் முகமான பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது.

அதாவது மே தினத்தன்று மீனவ சங்கங்களின் அங்கத்தவர்களும் போரத்தின் அங்கத்தவர்களும் ஒன்று சேர்ந்து தென்கிழக்கு கடலோரம் மாளிகைக்காடு கடற்கரை வீதியிலிருந்து சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள அப்பிள் தோட்ட வளாகம் வரை பேரணியாக நடந்து வந்து அங்கு அமைக்கப்படவிருந்த மேடையில் மே தின பொதுக்கூட்டம் நடாத்துவதற்கும் மற்றும் மீனவ தொழிலாளர் ஐவருக்கு ‘கடின உழைப்பாளி’ எனும் கௌரவம் வழங்கி மீனவ முதலாளிமார் சங்க உறுப்பினர்கள் கௌரவிப்பதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறான பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அசாதாரண சூழ்நிலையினைக் கருதி மேற்படி நிகழ்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team