இஸ்லாமிய பாடசாலைகளை ஓழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம் - Sri Lanka Muslim

இஸ்லாமிய பாடசாலைகளை ஓழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

இஸ்லாமிய பாடசாலைகளை ஓழுங்குறுத்துவதற்கான புதிய சட்டங்களை தயாா் செய்வதன் அவயசியத்தன்மை பற்றி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சா் வஜிர அபேவர்த்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சா் ருவான் விஜேவர்த்தன ஆகியோறுடன் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சா் ஏ.எச்.எம் ஹலீம் கலந்துரையாடியதாக நேற்று (30) அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் தெரிவித்தாா்.

மத்ரசா என்றழைக்கப்படும் கல்வி நிறுவனகளை பரிசீலனை செய்வது தொடா்பாக முஸ்லிம் சமய மற்றும் காலாச்சார அலுவல்கள் தினைக்களத்திற்கு உரித்தான சட்டரீதியான அதிகாரங்கள் இல்லை. எனினும் இந்த நிறுவனங்களை கண்கானப்புச் செய்வதை இலகுபடுத்தும் வகையில் 278 நிறுவனங்கள் மேற்படி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் பாடவிதானங்கள் தொடா்பில் பொதுவான முறையியல் மற்றும் ஒழுங்குபடுத்தல்களை தயாா் செய்வதற்கு இந்த தினைக்களம் நடடிவடிக்கை மேற்கொள்வதுடன் கல்வி, அமைச்சின் இணக்கப்பாட்டை பெற்று அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மத்ரசா மாணவா்களின் இறுதிப் பரீட்சைகள் இரண்டு கட்டங்களாக அதாவது அல் – ஆலீம் 1 மற்றும் அல் அலீம் 11 ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தினனால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்றன.

பிரிவெனா கல்வி தொடா்பிலான சட்டமானது பிரதம மந்திர ரணில் விக்கிரமசிங்க அவா்கள் கல்வி அமைச்சா் பதவியை வகித்த காலத்தில் சமா்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக் கொள்ப்பட்டதுடன் அதன் மூலம் பிரிவெனா கல்வியை முறைப்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்தலுக்கும் தேவையான சட்ட ரீதியான தத்துவம் கல்வி அமைச்சுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே மத்ரசா கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தொடா்பில் இந்தியா பங்களதேஸ், போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ள சட்டங்கள் விதிகள் மற்றும் இலங்கையின் பிரிவெனாக் கல்விச் சட்டத்தையும் அவதானிப்புச் செய்து மத்ரஸா கலவ்விச் சட்டத்தினை துரிதமாக வரைவு செய்யும் நடவடிக்கைகளை தற்போது முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அமைச்சா் எம்.எச்.ஏ கலீம் தெரிவித்தாா்

Web Design by Srilanka Muslims Web Team