அறிக்கை கையளிப்பு - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்று, நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அவ்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவரால், நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படை தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் வசந்த கரன்னாகொட, எட்மிரல் ஜயநாத் கொழம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர்களான மஹிந்த பாலசூரிய, சந்ரா பெர்ணான்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team