கடந்தகால பயங்கரவாத செயற்பாடுகளே இன்றைய துன்பியலுக்கு வித்திட்டுள்ளது. - Sri Lanka Muslim

கடந்தகால பயங்கரவாத செயற்பாடுகளே இன்றைய துன்பியலுக்கு வித்திட்டுள்ளது.

Contributors
author image

A.S.M. Javid

ஓரு சில தீய சக்திகளின் சதிநாசகார செயற்பாடுகளால் இன்று முழு முஸ்லிம் சமுகமும் கதிகலங்கி நிற்பதுடன் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் முகங்கொடுத்து வருவதுடன் சம்பந்தப்பட்ட தீய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உடந்தையானவர்களை இனம், மதம், சமயம் என்பதற்கு அப்பால் பங்கரவாதிகள் என்ற அடிப்படையில் இஸ்லாம் வெறுக்கும் அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பகிரங்கமாக காட்டிக் கொடுத்து பாரிய சமுகப் பொறுப்பை வெளிப்படுத்தும் இஸ்லாமியர்கள் மீது நடந்த சம்பவங்களை காரணமாக வைத்து தொடர்ந்தும் குற்றஞ் சுமத்தி தேவையற்ற வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்த ஒருசில இனவாத அரசியல் வாதிகளும், அதன் அருவருடிகளும் செயற்பட்டு வருகின்றனர். இது விடயத்தில் முஸ்லிம் இளைஞர்கள், பொதுமக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இன்று இலங்கை அரசியலில் தகுதியற்று இருக்கும் ஒருசில அரசியல் வாதிகள் குறிப்பாக ரஞ்சன் ராம நாயக்க, விமல் வீரவன்ச, தயாசிரி ஜெயசேகர, கருணா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் விநாயகமூர்த்தி முரலீதரன், வியாலேந்திரன், கோடீஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவாஜிலிங்கம், உள்ளிட் ஏனைய வடகிழக்கு உள்ளிட்ட தேர்தலிகளிலும், அரசியல்களிலும் தோர்க்கடிக்கப்பட்ட அரசியல் வாதிகளும், ஒருசில வக்குறோத்து ஊடகங்களும் கடந்த காலங்களில் தாம் செய்த துரோகங்களை கண்டு கொள்ளாது தற்போது முஸ்லிம்கள் செய்து விடார்கள் என்று கொக்கரிப்து வியப்பாக மட்டுமல்லாது கேலிக்கையாகவும் இருக்கின்றது.

1970 மற்றும் 1983களில் ஜே.வி.பியின் அடியாட்கள் செய்த மனித உரிமை மீறல்களை தமிழ் அரசியல் வாதிகள் மறந்து விடார்களா? 1980க்குப் பின்னரான கடந்த முப்பது வருட விடுதலைப் புலிகளின் யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் தலாதா மாளிகையில் குண்டு வைத்து பல நூற்றுக் கணக்கான மக்களைக் கொன்றது, பல நூற்றுக் கணக்கான பௌத்த குருமார்களை ஈவிரக்கமற்ற வகையில் சுட்டுக் கொன்றமை, பல விஹாரைகளைத் தாக்கியமை, தலை நகரில் மத்திய வங்கி, கொழும்பு புறக்கோட்டை குண்டுத் தாக்குதல்கள், விமான நிலையத் தாக்குதல்கள், அனுராதபுர இராணுவப் படைமுகாம் தாக்குதல்கள், 2009ஆம் ஆண்டு அக்குரஸ் தேசிய மீலாத் விழா குண்டுத்தாக்குதல்கள். கிழக்கில் முஸ்லிம் பள்ளிவாசல்களில் இறைவழிபாட்டில் இருந்தவர்களை கோலைத்தனமாக அநியாயமாக சுட்டுக் கொன்றமை, வடகிழக்கில் இருந்து அப்பாவி முஸ்லிம்களை அநியாயமான முறையில் வடகிழக்கை விட்டு விரட்டியடித்தமை, அவர்களின் கோடிக்கணக்கான உடமைகளையும், சொத்துக்களையும் சூறையாடிமை உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான சகல தீவிரவாதச் செயற்பாடுகளையும் இனவாத சிங்கள அரசியல் வாதிகள் மறந்து விடாhர்களா?

இவ்வாறு பாரிய பயங்கரவாத குற்மிழைத்தவர்கள் இன்று ஒருசில முஸ்லிம்கள் நடாத்திய தீவிரவாத செயற்பாடுகளை வைத்து முஸ்லிம்களை குற்றஞ் சுமத்துவதும், அவர்கள் மீது விரல் நீட்டுவதும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமல்லவா? கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம் பெற்ற சம்பவத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டுள்ளரர்கள் என்ற வகையில் இன்று முஸ்லிம்கள் துணிச்சலுடன் சம்பந்தப்படவர்களை அரசுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் காட்டிக் கொடுத்து அவர்களை கைது செய்ய முஸ்லிம்கள் துணிந்துள்ளமை பாராட்டுக்குரியதாக இருக்கின்றதுடன் இந்த பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க திடசங்கர்ப்பமும் பூண்டுள்ளனர்.

ஜே.வி.பி காலத்தில் சிங்கள மக்களும், விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ் மக்களும் துணிந்து இன்ற பயங்கரவாதிகளைக் காட்டிக் கொடுத்திருந்தால் அது பயங்கரவாதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து நாடு இன்று ஆசியாவில் ஒரு அமைதியான முதன்மை நாடாக இருந்திருக்குமல்லவா? அத்துடன் கடந்த 21ஆம் திகதிய தாக்குதல்கள் கூட இடம் பெற்றிருக்காது. கடந்த காலத்தில் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் வாதிகளும் அந்த மக்களும் விட்ட தவறகளும், பிழைகளும் இன்று ஒரு சமுகத்தினை முற்றாக பாதிப்படைய வழி சமைத்துள்ளது.

என்றாலும் இந்தச் செயற்பாடுகளால் பாதிப்புற்ற 99 சதவீத முஸ்லிம்கள் இன்று துணிந்து விட்டார்கள். இதனை தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகளும், அவர்களுக்கு ஜால்ரா போடும் பொய்யான ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் முஸ்லிம்கள் மீது விரல் நீட்டுவதில் இருந்தும், முஸ்லிம் அரசியல் வாதிகள் மீது குற்றஞ் சுமத்துவதில் இருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

நீங்கள் எல்லாம் துணியாத ஒரு விடயத்தில் துணிச்சலுடன் இன்று முஸ்லிம் சமுகம் துணிந்து செயற்படுகின்றது. இவர்களின் இந்தச் துணிச்சல், ஆர்வங்களை உங்கள் வங்குறோத்து அரசியலாலும், வங்குறோத்து ஊடக தர்மத்தாலும் கொச்சைப்படுத்தி விட வேண்டாம் என முழு முஸ்லிம் சமுகமும் விநயமாக வேண்டி நிற்கின்றனர்.
எனவே இனிவருங் காலத்திலாவது பிரச்சினைகளுக்கும், வன்முறைகளுக்கும் வித்திடாது பொறுப்புடனும், நிதானமாகவும், நடுநிலையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என சகல சமாதான விரும்பிகளும் எதிர் பார்க்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team