தலைப்பிறை பார்க்கும் மாநாடு - Sri Lanka Muslim
Contributors
author image

A.S.M. Javid

ஹிஜ்ரி 1440 ரமழான் மாத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.

இன்று நாட்டில் எப்பாகத்திலும் தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்காத காரணத்தினால் ஷஹ்பான் மாத்தத்தை நாளை திங்கற் கிழமை 30ஆக பூர்;த்தி செய்து நாளை புனித நோன்மை ஆரம்பிக்குமாறு பிறைக் குழு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இம்மாநாட்டுக்கு பிறைக்குழுவின் தலைவர் மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை அங்கதத்வர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், ஏனைய சகல பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தலைப் பிறை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை பிறைக்குழுவின் தலைவர் மௌலவி அப்துல் ஹமீத் பஹ்ஜியும் அரசாங்கத்தின் சார்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.ஏ. அன்வர் அலியும், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சார்பாக அதன் தலைவர் றிஷ்வி முப்தியும் விடுத்தனர். இதன்படி புனித நோன்பு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.

IMG_0955 (1) IMG_0969 IMG_0972 IMG_0981

Web Design by Srilanka Muslims Web Team