ISIS ஒழிக்கின்ற நடவடிக்கை அரசைவிட முஸ்லிம்கள் பொறுப்பே அதிகம்! » Sri Lanka Muslim

ISIS ஒழிக்கின்ற நடவடிக்கை அரசைவிட முஸ்லிம்கள் பொறுப்பே அதிகம்!

ISIS

Contributors
author image

நஜீப் பின் கபூர்

இந்தக் கட்டுரை ஊடாக நாம் இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு இஸ்லாமிய பிரசையையும் தனி மனிதன், பிள்ளைகள், பெற்றோர், சமூக அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் தலைமைகள் பிரதேச, தேசிய மட்டம் என்ற வகையில் சில செய்திகளை வழங்க முற்படுகின்றோம்.

அப்பாவி கிருஷ்த்தவ மக்கள் மீது நடாத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் இன்று நமது நாட்டை மட்டுமல்ல முழு உலகத்தையும் ஆட்டிப் போட்டிருக்கின்றது. அதன் தலைவன் பக்தாதி தமது இஸ்லாமிய அரசு தோற்கடிக்கப்பட்டதால் அதற்குப் பலிவாங்கவே தாம் இலங்கையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் முழு உலகிற்கும் தகவல் கொடுத்திருக்கின்றான். இதனால் அவன் இன்னும் உயிருடன் இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இவனது இந்த அறிவிப்பு மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப்போடுகின்ற கதை என்பது மிகவும் தெளிவாகின்றது. அவர்களது அரசு தோற்கடிக்கப்பட்டதற்கு இந்த நாட்டிலுள்ள அப்பாவி கிருஷ்தவ மக்களை பலிவாங்குவது என்ன நியாயம்? என்று கேட்பதை விட இந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நோக்கமும் இலக்கும் மிகத் தெளிவாக மீண்டும் ஒருமுறை உலக்கிற்கு தெரிய வந்திருக்கின்றது.

இதனை இந்த நாட்டில் வாழ்க்கின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல முழு உகலகலவிய முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது முற்றிலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அமைப்பு. இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டிருப்போர் எல்லாம் முஸ்லிம்களுமல்ல இஸ்லாத்தின் பெயரில் இயங்குகின்ற அமைப்புக்கள் எல்லாம் இஸ்லாமிய அமைப்புகளுமல்ல.

முஸ்லிம்கள் அல்லாத ஜேவிபி மற்றும் விமல் வீரவன்ச தரப்பினர் கூட இது அமெரிக்காவின் தேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. எனவே தாக்குதலைப் பாவித்து இலங்கையில் அமெரிக்கா காலூன்ற முனைகின்றது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

நமது நாட்டில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு ஊடாக இந்த ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவி இருக்கின்றது என்பது தற்போது மிகத் தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது.

இவ்வாறான இயக்கங்களை இவர்கள் பணத்தால் விலைக்கு வாங்கி இருக்கின்றார்கள். இது போன்று உலகில் பல இடங்களில் இவர்கள் ஊடுருவி இருப்பார்கள். எனவேதான் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சஹ்ரானின் குடும்பத்தினர் சாய்தமருதுவில் கொல்லப்பட்ட போது அவர்களிடம் 45 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது.

படைத்தரப்பு சுற்றிவளைத்த பின்னர் இனியும் நாம் தப்ப முடியாது என்று தெளிவாக உணர்ந்து கொண்ட சஹ்ரானின் சகோதரர்கள் ‘நாய்களே உங்களுக்காகத் தான் போராடுகின்றோம். உயிரைக் கொடுக்கின்றோம். இந்தாங்க இந்தப் பணத்தை சாப்பிடுங்கள்’ என்று 5000 ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக வீசி எறிந்தார்கள் என்று பிரதேசத் தகவல்கள் சொல்லி இருந்தன.

எப்படி இவர்களிடம் இந்தளவு தொகையான பணம் எப்படி வந்திருக்க முடியும்? இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. தாக்குதலில் சம்பந்தமுடையவர்கள் தமது குடும்பத்தினர் மனைவிமார் பெயரில் பல வாகனங்களைக் கொள்வனவு செய்துதிருக்கின்றார்கள். எனவே இவை எல்லாம் எப்படிச் சாத்தியம். இவர்களுக்கு இந்தப் பணம் எங்கிருந்து வந்தது யாரெல்லாம் இதனால் போசிக்கப்பட்டிருக்கின்றார்கள். என்ற தகவல்கள் விரைவில் தெரிய வரக்கூடும்.

கடந்த வாரம் எழுதிய கட்டுரையில் நாம் இப்படி ஒரு தகவலை சொல்லி இருந்தோம். சஹ்ரான் இதன் தலைவனாக இருந்தால் முதல் தாக்குதலிலே அந்த இயக்கம் அவனைப் பலி கொடுக்காது. இதற்கு வேறு தலைவன் ஒருவன் இருக்கக் கூடும் என்று சொல்லி இருந்தோம். அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித நாம் கடந்த வாரம் கூறிய அதே கருத்தை இந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்து சஹ்ரான் உண்மையான தலைவன் அல்ல என்ற எமது கருத்தை உறுதி செய்திருக்கின்றார்.

அத்துடன் ராஜித இதற்கு வேறு ஒருவனே தலைமை தாங்கி இருக்கின்றான் நல்ல வேலை அவன் தற்போது கைதாகி இருக்கின்றான் என்றும் சொல்லி இருந்தார். தலைவர் கைதாகி இருந்தால் இன்னும் புதிய பல தகவல்கள் வெளியில் வரும். எவரெல்லாம் இந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தால்கள் என்று தெரிய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பிர சமூகத்தினர் தம்மை சந்தேக்கிப்பது எப்படிப் போனாலும் இன்று ஒரு முஸ்லிமுக்கு அடுத்த முஸ்லிமை நம்பிக்கையில்லை. அடுத்த வீட்டுக்காரனை நம்பமுடியாது. தந்தைக்கு தனது பிள்ளைளை நம்ப முடியாது. பிள்ளைக்குத் தனது தாயை தந்தையை நம்ப முடியாது. வருகின்ற தகவல்களின்படி தாய் தந்தையர்களே தமது பச்சிலம் பாலகர்களை வெடிகுண்டு வைத்துத் சிதைத்திருக்கின்றார்கள்.

குழந்தைகள் உடம்பில் கூட வெடிகுண்டுகளை கட்டி இஸ்லாத்தின்போரால் அவர்களைத் தியாகிகளா பார்க்கின்ற ஒரு கொடிய மனநிலைதான் இவர்களுக்கு இருந்திருக்கின்றது. மதத்தின பேரால் இவ்வறான கொலை சம்பவங்களை நாம் இதற்கு முன்னர் நமது நாட்டில் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கின்றோமா என்பதனை முஸ்லிம் சமூகம் யோசிக்க வேண்டும்.

கொலையாளிகள் இலங்கையை ஏன் தெரிவு செய்தார்கள் என்பதற்கு அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். இலங்கையில் சீனா, இந்திய ஆதிக்கத்தை கட்டுபடுத்தவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற போர்வையில் அமெரிக்காவுக்கு கதவுளைத் திறந்து கொடுக்கின்ற வேலைதான் இது என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.

எம்மைப் பொருத்த வரை அந்த வாதங்களை முற்றாக எதிர்க்க முடியாவிட்டாலும். உலக ரீதியில் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதும் கிருஷ்த்தவ முஸ்லிம் உறவில் பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதும் முஸ்லிம்களின் இருப்பை உலக ரீதியில் கேள்விக்குறியாக்குவதும் இவர்களின் பிரதான நிகழ்ச்சி நிரலில் அடங்குகின்றது என்பது எமது வாதம்.

நமது சமூகம் – சமயத் தலைமைகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதகளின் ஊடூருவலை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருந்தார்கள் என்று தெரியாது. அவர்கள் தமது சொல்லைக் கேட்காது முரண்டுபிடிக்கின்ற ஒரு அமைப்பாகத்தான் பொதுவாக ஒட்டு மொத்த தவ்ஹீத் அமைப்புக்களையும் இவர்கள் கடந்த காலங்களில் நோக்கி வந்திருந்தார்கள் என்பது எமது கருத்து.

சர்வதேசப் பயங்கரவாதிகள் தேசிய தவ்ஹீத் அமைப்பு ஊடாக இந்த நாட்டில் கால்பதித்திருக்கின்றார்கள் என்பதனை ஒருபோதும் நமது மதத் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் பற்றித் தெரிந்திருந்தால் முஸ்லிம் மதபோதகர்கள் இவர்களைப்; பற்றி ஜூம்மாப் பிரசங்கங்களின் போது விமர்சித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நாட்டில் நடக்கவில்லை.

எனவேதான் ஐஎஸ்ஐஎஸ் ஒரு கொலைகார இயக்கம் என்று எந்தவொரு ஜூம்மாப் பேருரைகளிலும் முஸ்லிம் மதத்த தலைவர்கள் இதுவரை பரப்புரைகளை மேற்கொள்ளவில்லை. எனவே இது விடயத்தில் எல்லா இடங்களிலும் அரசு, பாதுகாப்புத் தரப்பு முஸ்லிம் தரப்பு என நிறையவே தவறுகளும், ஓட்டைகளும் விடப்பட்டிருக்கின்றன. எனவே இதன் பிறகாவது இந்த கொலைகார இயக்கம் பற்றி முஸ்லிம்கள் புரிந்து கொண்டு அதற்கு எதிரான உறுப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நமது தலைமைகள் குறித்து கார்தினல் மெல்கேலம் ரஞ்சித் இப்படி ஒரு கருத்தைக் கூறி இருந்தார். முஸ்லிம் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பது அவரது கருத்தாக இருந்தது.

முஸ்லிம் சமூகத்துக்குள் என்ன நடக்கின்றது என்ற விடயத்தில் முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகத் தலைமைகளுக்கு போதிய தெளிவு-அறிவு இல்லாவிட்டாலும் உள்நாட்டு மட்டும் சர்வதேச இஸ்லாமிய சமூகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை கார்தினல் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார் என்பது கட்டுரையாளன் கணிப்பு. பேராயர் முஸ்லிம் தலைமைகள் பற்றிச் சொன்னதைத்தான் நாமும் எப்போதுமே சொல்லி வருகின்றோம்.

இதற்கு நல்லதொரு உதாரணத்தை ஈஸ்டர் தாக்குதலில் பின் எம்மால் பார்க்க முடிந்தது. கொழும்பு பெரிய பள்ளிவாயில் இமாம் இந்த நெருக்கடியான ஜூம்மாவைத் தவிர்த்து முஸ்லிம்கள் வீடுகளிலே லுஹர் தொழுகையை மேற்கொள்ளுங்கள் என்று வானெலியில் முஸ்லிம்களை அறிவுருத்திக் கொண்டிருந்தார். அதே நேரம் இஸ்லாமிய கலாச்சார அமைச்சர் ஹலீமும் இதே நிலைப்பாட்டில் பேசினார்.

முஸ்லிம்கள் இப்படி எல்லாம் கோழைகளாக வாழ முடியாது ஜூம்மாத் தொழுகையை பள்ளிவாயில்களிலே நடாத்தங்கள் என்று ஊடகங்களில் சொல்லி இருந்தார் மேல் மாகாண ஆளுனர் அசாட் சாலி.

ஜூம்மாவை 20 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று வேறு சொல்லப்பட்டது. ஆனால் பொறுப்பு வாய்ந்தவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்ட பள்ளிவாயிலில் வழக்கம் போல் ஜூம்மாப் பிரசங்கத்தை நேரடியாக பணம் கொடுத்து வானெலியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்ததுடன், தாக்குதலை ஜேவிபி கிளர்ச்சியுடனும் புலிகளின் போராட்டத்துடனும் ஒப்பிட்டு அந்தப் பிரசாரத்தில் பொறுப்பு வாய்ந்தவரால் போதிக்கப்பட்டது.

எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் கூட ஒரு பொதுத் தீர்மானத்திற்கு இவர்களினால் வரமுடியவில்லை என்பது ஈகோ பிரச்சினை. நாங்கள்தான் பெரியவர்கள் பொறுப்பானவர்கள் எங்களை கேட்காமல் எப்படி முடிவு எடுக்க முடியும் என்ற வம்புக் கதைதான் இது.

கிருஷ்த்தவர்கள் கேட்டுக் கொண்டதற்காகத்தான் இந்த ஜூம்மா பிரசங்கமும் தொழுகையும் என்று அதற்கு வேறு வானொலியில் விளக்கம் சொல்லப்பட்டது. நாம் சொல்கின்ற இந்த கதையின் உண்மைத் தன்மையை கடந்த வெள்ளி வானெலி நேரடி ஒலிபரப்பை எவர் வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிக் கேட்டுப்பார்க்க முடியும். இந்த முரண்பாட்டுக்குக் காரணம் நல்ல வழிகாட்டல் இன்மையும் அறிவு சார்ந்த விடயமும் என்று புலனாகின்றது.

இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும் குற்றவாளிகளாக காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சமூகத்தைக் காக்க வேண்டிய இந்த நேரத்தில் தம்மை எப்படிக் காத்துக் கொள்வது என்றுதான் அவர்கள் இன்று பார்க்கின்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது.

நிலமை எந்தளவுக்குக் கொடூரமாக இருக்கின்றது என்றால் எல்லா அரபு எழுத்துக்கள், புத்தகங்கள் சமயப் பிரசுரங்கள் பயங்கரவாதப் பிரசுரங்களாகப் பார்க்கப்படுகின்றது. குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பை வைத்திருந்த ஒரு பௌத்த தேரர் கைது செய்யப்படடிருக்கின்றார். அண்மையில் ஜனாதிபதிக்குக் கூட இதன் பிரதி ஒன்று கையளிக்கப்பட்டது. அப்படியானால் ஜனாதிபதிக்கும் ஆபத்தா என்று கேட்கத் தோன்றுகின்றது.

வீடுகளில் அன்றாடத் தேவைகளுக்hகன கத்தி பொல்லு போன்ற உபகரணங்கள் கூட முஸ்லிம்கள் இன்று குழி தோண்டிப் புதைக்கின்ற நிலை தோன்றி இருக்கின்றது. இந்த அனைத்துக் கொடுமைகளுக்கும் பதில் சொல்வது யார்? எனவே முஸ்லிம்களே இந்த ஐஎஸ்ஐஎஸ் நமது நாட்டின் இயல்பு நிலையையும் முஸ்லிம்களின் இருப்பையும் கலாச்சாரத்தையும் குழிதோன்றி புதைக்கின்ற காரியத்தைதான் சர்வதேச மட்டங்களில் செய்கின்றார்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

எனவே தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவர் மீதும் ஏனையோர் எச்சரிகையாக இருங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை நம்ப முடியாது. பிள்ளைகளுக்கு பெற்றோரை நம்ப முடியாது என்பதனைப் புரிந்து செயல்படுங்கள்.

தேசிய மட்டம், பிராந்திய மட்டம், கிராமிய மட்டம், மஹல்ல மட்டம், சர்வதேச மட்டம், இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமியர் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகள், செல்வந்த நாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் புதிய யுக்திகளுடனும் புதிய நியாயங்களுடனும் தாக்குதல்களை மேற்கொள்ள நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

செல்வாக்கான மத்திய கிழக்கு நாடுகள் மலேசிய போன்ற நாடுகளில் இவர்கள் தமது கைவரிசையைக் காட்டி அந்த நாடுகளை பொருளாதாதார ரீதியில் சீர்குழைக்க வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான தாக்குதல்களுக்கு மனித குண்டுகளை மட்டுமல்ல ஊடகங்கiயும்; இவர்கள் பாவிக்கின்றார்கள்.

எமது அவதானப்படி அரசு மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு முஸ்லிம் சமூகத்திற்குள் என்ன நடக்கின்றது? அதன் கட்டமைப்புக்கள் எப்படிப் போயக்; கொண்டிருக்கின்றன என்பதை விபரமாக தெளிவு படுத்த வேண்டி தேவை தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருகின்றது.

பொதுவாக நோக்கின்ற போது இதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகள் – சேதனைகள் ஒரு கட்டுக்கோப்புக்குள்தன் போய்க் கொண்டிருக்கின்றது. அவர்கள் தரப்பில் ஏற்பட்டிருக்கின்ற சந்தேகங்களை எவரும் கேள்வி கோட்க முடியாது என்ற நிலைதான் இன்று நாட்டில் இருக்கின்றது. இந்த காட்டுமிரதண்டிகளை இந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதால் மட்டுமே இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் மீண்டும் தலைநிமிர முடியும். இருந்தாலும் வடுக்கள் இருக்கத்தான் செய்யும்.

காகம் பறக்காத ஊருமில்லை காத்தான்குடியான் வாழாத இடமுமில்லை என்ற ஒரு பேச்சு வழக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகின்றது. சஹ்ரான் என்ற ஒரு மனிதன் அங்கு மக்கள் இருப்பை இன்று கேள்விக்குறியாக்கி விட்டான்.

இந்த நாட்டில் முஸ்லிம்களின் செல்வாக்கு மிக்க நகர் காத்தான்குடி. அங்கு வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும் மரண பயத்தில் உரைந்து போய் நிற்க்கின்றான். குட்டி சவுதி என்ற அந்த மண் இன்று குப்புற வீழ்ந்து கிடக்கின்றது. மொத்தத்தில் நாட்டில் வாழ்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்கள் நிலையும் இதுதான் இன்று.

போதை வியாபாரத்தின் பின்னால் பண ஆசை இருப்பது போல் இதன் பின்னாலும் இஸ்லாமிய விரோதிகளின் பணம் நிறையவே மூலதனமிடப்பட்டடிருக்கின்றன. என்பதற்கான ஆதரம்தான் இவர்களிடம் இருக்கின்ற பணக் குவியல்.

Web Design by The Design Lanka