ஜமியதுல் உலமா சபைத் தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சு கடிதம் - Sri Lanka Muslim

ஜமியதுல் உலமா சபைத் தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சு கடிதம்

Contributors
author image

Editorial Team

அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சர்தமத தலைவர்களின் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜமியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்-ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்த கருத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்.கே.ஜீ.கே நம்மவத்த அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்தமத தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அகில இலங்கை ஜமியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்-ஷெய்க் ரிஸ்வி முப்தி, ஐஎஸ் தீவிரவாத குழுவுடன் தொடர்புடைய இலங்கையர்கள் சிலர் இந்நாட்டினுள் இருப்பதாக ஜமியதுல் உலமா சபை 2015 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தனவிற்கு இது தொடர்பான எவ்வித அறிக்கையும் வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்.கே.ஜீ.கே நம்மவத்த ஜமியதுல் உலமா சபையின் தவைருக்கு குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர் தெரிவித்த கருத்தை திருத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு இல்லாவிடின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

B3B6973C-E4DA-4F20-A7BA-A9D6D588EB28

Web Design by Srilanka Muslims Web Team