சந்தர்ப்பவாதத்தாலும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினாலும் பாதிக்கப்படும் அப்பாவிகள் » Sri Lanka Muslim

சந்தர்ப்பவாதத்தாலும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினாலும் பாதிக்கப்படும் அப்பாவிகள்

court

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சட்டத்தரணி சறூக் – கொழும்பு


யார் இந்த தவ்ஹீத் (ஏகத்துவ)வாதிகள் ?

1940 களில் இலங்கையிலிருந்து ஹஜ் புனிதயாத்திரிகைகளுக்கு மக்கா மதினாவுக்கு சென்ற முஸ்லிம்கள் அங்கு அறபிகள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதை காண்கிறார்கள் திகைப்படைகிறார்கள்.

பாரம்பரிய சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவற்றை பின்பற்றிவந்தவர்களின் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாம் கண்ட தூய இஸ்லாத்தை ஒரு சிறு குழுவாக குருநாகல பறகாதெனிய எனுமிடத்தில் செயற்படுத்தினர்.

இவர்களின் பிரச்சாரங்கள் தென்னிந்தியாவைச்சேர்ந்த முஸ்லிம்களைக்கவர தமிழ்பேசும் உலகிற்கே தவ்ஹீத் கொள்கையை பரப்புவதற்கு அவர்கள் காரணமாகினர்.

அப்படியென்றால் வஹ்ஹாபிகள் என்பவர்கள் யார்? அவர்கள் பயங்கரவாதிகளா?

1744ல் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் எனும் தூய இஸ்லாத்தை விளங்கிய அறிஞருக்கும் சவூதியின் முதல் மன்னனான முஹம்மத் பின் சவ்த்க்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க முஹம்மத் (ஸல்)அவர்களால் கொண்டுவரப்பட்ட தூய இஸ்லாமிய கொள்கை (தவ்ஹீத் கொள்கை) அரசினது மார்க்கமாக்கப்பட்டது.

இத்தூய ஏகத்துவக்கொற்கைக்கு முரணாக நபியவர்களின் தோழர்கள் மற்றும்
உறவினர்களின் அடக்கஸ்தளங்கள் மீது கட்டப்பட்டிருந்த பல வணக்கஸ்தளங்கள் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. இந்தச்செயலினூடாக “இறைவனை மட்டும் வணங்க வேண்டும்” என்ற ஏகத்துவக்கொள்கை மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

இச்செயற்பாட்டை செய்வதற்கு காரணமாக இருந்த “வஹாப்” என்பவரின்ிபெயரை ஏகத்துவத்தை பேசுகின்றவர்களை கேலி செய்வதாக நினைத்து அவர்களின் எதிரிகள் (அடக்கஸ்தள வணங்கிகள்) ஏகத்துவ வாதிகளை “வஹாபி”என அழைக்கின்றனர்.

இலங்கையில் தவ்ஹீத்வாதம் பெருக வழிவகுத்தது எது?

திறந்த பொருளாதாரக்கொள்கை 1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட போது எண்ணைவளம் நிறைந்த நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச்சென்ற இலங்கை முஸ்லிம்கள் அங்கு இஸ்லாத்தின் தூயவடிவை காண்கின்றனர்.

இலங்கையில் இஸ்லாம் என்ற போர்வையில் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணான ஒன்றை தாங்கள் பின்பற்றுவதும் தூய இஸ்லாம் கவனிப்பாரற்று கிடந்தமையைக்கண்டு அம்முஸ்லிம்கள் கவலையடைந்தனர் அல்குர்ஆன் தங்களை விட்டு தூரமாக்கப்பட்டிருப்பதையும் இஸ்லாம் என்ற போர்வையில் கட்டுக்கதைகள் இஸ்லாமாக்கப்பட்டிருந்ததையும் காண்கின்றனர் .

வேலைசெய்யும் மொழியாக அறபு இருந்ததால் அறபுமொழியைக்கற்பது அவர்களுக்கு இலகுவாகயிருந்தது .அல்குர்ஆனை தமது தாய்மொழியில் விளங்கிக்கொண்டனர்.தூய இஸ்லாத்தை அடையாளம்கண்டு அதனைப் பிரச்சாரம் செய்ததுடன் அதனை செயற்படுத்தியும் வருகின்றனர்.

இவ்வாறு பிரச்சாரத்தின் மூலம் ,தமது சுயலாபங்களுக்காக அல்லது அறியாமை காரணமாக வளைக்கப்பட்டிருந்த இஸ்லாம் நிமிர்த்தப்பட்டது.

இவ்வுலகில் தவ்ஹீத்வாதிகளின் நோக்கம் நோக்கம் என்ன?

தூய இஸ்லாத்தைப்பிரச்சாரத்தை செய்தவர்கள் அதனை செய்வதன் ஊடாக “தாமும் தன்னோடு சேர்ந்த எல்லோரையும் சுவர்க்கத்திற்கு அழைத்து செல்கிறோம்” என்ற திருப்தியைப்பெறுகிறார்கள். அத்துடன் அவர்கள் “பணம் பணம் “என பணத்தின் பின்னால் ஓடி தமது நின்மதியை இழக்க விரும்பவில்லை. அளவோடு உழைத்து மற்றவர்களுக்கும் உதவிசெய்வதே அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோளாக கருதுகின்றனர்.

இவர்கள் இறைவனுக்கு மாத்திரமே பயப்படக்கூடியவர்கள் மற்ற எந்தவிடயங்களுக்கும் பயப்படக்கூடியவர்கள் அல்ல.இதனால் தான் இவர்கள் தங்களை ஏகத்துவ வாதிகள் (தவ்ஹீத் வாதிகள்)என அடையாளப்படுத்துவதை விரும்புகிறார்கள்.

இவர்களின் பிரச்சாரங்கள் சினிமா கிரிக்கட் பைத்தியங்களாக அலைந்த இளைஞர்களை கவர்ந்ததுடன் அவர்களை இரத்ததானம்
செய்பவர்களாகவும்,திடீர் இயற்கை அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களாகவும் மாற்றியது.

அப்படியானால் ஸஹ்ரான் தவ்ஹீத்வாதியா?

ஆரம்பத்தில் சிறந்த ஏகத்துவ (தவ்ஹீத்) பேச்சாளராக இருந்த ஸஹ்ரான் காலம் செல்லச் செல்ல அவருடைய பேச்சுக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக அமைந்த போது அவரை National Tawheed Jamath(NTJ) திலிருந்து நீக்கப்பட்டார்.

ஸஹ்ரான் ஏகத்துவத்தின் வரையறைகளை மீறி இஸ்லாத்தின் விரோதிகளான ISIS தீவிரவாதிகளுடன் தொடர்புபட்டபோது அது சம்பந்தமாக இலங்கையின் புலனாய்வு துறையினருக்கு முறையிட்டதும் இந்த ஏகத்துவ இளைஞர்களே.

இலங்கை பாதுகாப்பு தரப்பினரனால் அவசரகால சட்டத்தின் பின் மிகவும் வினைத்திறனாக செயற்படுவது போல் தாக்குதல் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடன் செயற்பட்டிருந்தால் இவ்வாறான பாரிய இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் .

அப்படியானால் ISIS என்பவர்கள் யார்?

அமெரிக்காவினாலும் ஐரோப்பிய யூனியனினாலும் பயிற்சியளிக்கப்பட்ட யூத இனத்தைச்சேர்ந்த ஒருவன் “அபுபக்ர் அல்பக்தாதி” எனும் முஸ்லீமினின் பெயரை வைத்துக்கொண்டு இந்த ISIS அமைப்பிற்கு தளைமைதாங்கி மேற்கூறப்பட்ட கூட்டுக்களவானிகளுடன் சேர்ந்து தனது அறபு புலமையை வைத்துக்கொண்டு முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து கொண்டு இருக்கிறான் .

உலகில் எங்கு எங்கு பெற்றோலிய வளங்கள் இருக்கிறதோ அங்கு தற்கொலை குண்டுத்தாக்குதல் செய்யுமளவுக்கு அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. (இலங்கையின் கரையோரங்களில் பெற்றோழியம் காணப்படுவதாக ஒரு தகவல்.)

இஸ்லாமிய கோட்பாட்டுக்கு முரணான தற்கொலைக்கு அவர்களை உட்படுத்துமுகமாக குர்ஆன் வசனங்களை தமக்கு ஏற்றவகையில் வளைத்து தற்கொலை என்பது தங்களுக்கு சுவர்க்கத்தைப்பெற்றுக் கொடுக்கும் என கூறி இவனின் எஜமானாகிய அமெரிக்காவினதும் ஐரோப்பிய யூனியனின் குள்ளநரி தனத்தை இந்த ISIS பயங்கரவாதிகள் நிறைவேற்றுகின்றனர்.

அமெரிக்காவின் குள்ளநரித்தனம் என்றால் என்ன?

“ உள்நாட்டின் பாதுகாப்புக்கு நாம் உதவி செய்து தற்கொலை தாக்குதல் செய்யும் ISIS தீவிரவாதிகளைப்பிடிக்க உதவுகிறோம் எனக்கூறி அந்நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டுதல்”
என்பதே அந்த குள்ளநரித்தனம்.

எமது நாட்டில் சந்தர்ப்பவாதத்தை பயன்படுத்தும் நெஞ்சில் ஈவு இரக்கமற்றவர்கள் யார்?

ஏகத்துவ வாதிகளின் தீவிர பிராச்சாரங்களூடாக பின்வரும் சமய ,சமூக விரோத செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தைவிட்டு நீங்கத்தோன்றின

1.கபூர்வணக்கம்.
2.கத்தம் ,பாத்திஹா மற்றும் கந்தூரி .
3.போதை பொருள் பாவனை.
4.விபச்சாரம்,களவு மற்றும் கொள்ளை.
5.மூடநம்பிக்கைகள் பேய், பிசாசு,செய்வினை
6.இசை சினிமா பைத்தியம்.
7.வட்டி சம்பந்தப்பட்ட பொருளாதாரம்.
8.சீதனக்கொடுமை.

மேற்கூறப்பட்ட தீய செயல்களினால் வயிறு வளர்த்தவர்கள் ஏகத்துவ வாதிகளினால் தங்கள் வருமானங்கள் குறைந்து கொண்டு போவதை அவதானித்து பலிவாங்குவதற்கான தருனத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அத்தருணமானது, கடந்த குண்டுத்தாக்குதலின் பின்னர் அவசரகால ஒழுங்கு விதிகளைக்கொண்டுவந்த ஜனாதிபதி சந்தேகமானவர்கள் தொடர்பில் தகவல்கள் தரும்படி மக்களை வேண்டிய போது அவர்களுக்கு கிட்டியது.

ஒரு ஊரில் வித்தியாசமானவர்கள் புதிதாக நடமாடுகின்ற போது அவர்களை பற்றிய தகவல்களை கட்டாயமாக நாம் பாதுகாப்பு தரப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.அதை சாய்ந்தமருது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.அதன்காரணமாக இஸ்லாத்தின் எதிரிகளான ஸஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் அழிக்கப்பட்டனர்.

அதே போன்று மாவனல்லையில் தனது சொந்த மகளையே பிடித்துக்கொடுத்த தந்தை எமது கண்ணுக்கு ஒரு தேசியவீரனான தென்படுகிறார்.

ஆனால் எமது கண்களுக்கு முன்னே சிறந்த மனிதநேயத்துடன் வாழ்கின்ற ISIS எனும் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக anti-terrorism பொறிக்கப்பட்ட T Shirtகளை போட்டுக்கொண்டு தெருத்தெருவாக பிரச்சாரங்களைச்செய்துவந்த ஏகத்துவ சகோதரர்களை காட்டிக்கொடுப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வந்தது.

தகவல்களை கொடுத்ததன் பின்னர் பயங்கரவாதத்திற்கே எதிரானவர்களை பயங்கரவாதிகள் போன்று இழுத்துச்செல்வதை பார்த்ததன் பின்னர் எப்படி உங்களால் தூங்க முடிகிறது.

கடந்த 24/04/2019 லிருந்து இற்றைவரைக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் எமது சகோதர சகோதரிகள் பின்வரும் விடயங்களுக்காக தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிவான்கள் அனுமதியளிப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

1.தனது அடையாளத்தை சரியாக கூறமுடியாமை.

2.ISIS ஐ பற்றிய பத்திரிகைச்செய்திகள் சஞ்சிகைகளை வைத்திருந்தமை.

3.வாள் அல்லது கத்திகளை வைத்திருந்தமை.

4.இராணுவ உடைகள் போன்ற உடைகளை வைத்திருந்தமை.

5.அரை குறையாக எரிக்கப்பட்ட பேப்பர்களை வைத்திருந்தமை.

6.Anti terrorism என எழுதப்பட்ட ரீ சேர்ட்டுகளை வைத்திருந்தமை.

7.மொபைல்போனில் அல்லது laptop மற்றும் கம்பியூட்டர்களில் அந்த நாசமா போனவனின் சத்தியப்பிரமாணம் அல்லது பயான் அல்லது பாஸ்வேர்ட் போடாமல் திறக்கப்படாத ஏதாவது folder கள் போன்றவற்றை வைத்திருந்தமை.

8.attact ,attact என பிள்ளைகள் யாராவது தனது கோம் வேர்க் கொப்பியில் எழுதி dictation பாடமாக்கினமை.

9.பெற்றோல் கேனை வைத்திருந்தமை.

10.ஏதாவது தவ்ஹீத் ஜமாஆத்தின் ரிசிட் புத்தகங்களை வைத்திருந்தமை.

11.வீடியோ கெமரா வைத்திருந்தமை.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுகின்றவர்களின் நிலையென்ன?

3 நாட்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை நீதவான் பொலிசாருக்கு வழங்குவார்.

சாதாரணமாக Nokia basic போன் ஒன்றை பாவிக்கும் ஒரு நபர் 3 நாட்களில் பிணையில் விடுவிக்கப்படலாம்.

போனுடனும் லப்டொப்புடனும் மல்லுக்கட்டும் சமூக ஊடகவாதிகளாகிய எம்மைபோன்றவர்களின் கைதுகளின் போது எமது உபகரணங்களை பரிசோதிப்பதற்காக 3 நாட்களின் பின்னர் இன்னும் 10 நாட்களோ 8 நாட்களோ கால நீடிப்பை பொலிசார் நீதவானை கோரலாம்.நீதவான் அதனை வழங்கி பிணைக்கோரிக்கையை நிராகரிக்கலாம்.

அது மாத்திரமன்றி ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகளை நியமித்தால் விசாரனைகளை விரைவாகவும் இலகுவாகவும் மேற்கொள்ள முடியும். இது தொடர்பாக அரசியல் வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்

பரிசோதிக்க வரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

“ஏன் எனது client ஐ அடித்தாய் “என ஒரு பொலிஸ் நிலைய பொறுப்பு (OIC)ஐ நான் கேட்ட போது

“இப்றாகீமின் மகனின் வீட்டின் கதவைத்திறந்த போது தற்கொலை குண்டு தாரியின் குண்டு வெடிக்க வைக்கப்பட்டு எங்களில் மூவர் செத்தனர். இதே எண்ணத்துடனேயே தகவல் கிடைத்தவுடன் ஒவ்வொரு வீட்டுக்கதவையும் நாம் திறக்க வைக்க வைக்கிறோம். அப்போது எமது நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய்?”
இதற்கு என்னிடம் பதிலில்லை.

தேடுதல்கள் நடக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவசரகால ஒழுங்கு விதிகளின் படி Search warrant இல்லாமலே எவ்விடத்தையும் தேடுதல் செய்வதற்கு பாதுகாப்புத்துறையினருக்கு அதிகாரமுண்டு. அதற்கு எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் நிரபராதியாக இருந்தாலும் எதிர்த்தமைக்காக மாத்திரம் சிறைவாசம் செல்ல வேண்டிவரும்.

வெளியூரில் தற்காலிகமாக வேலை செய்யும் உங்கள் உறவுகள் பற்றிய விபரங்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவர்களைப்பற்றிக்கேட்டால் போன் நம்பரை கொடுங்கள்.

பொய்தகவல்களை பரப்பாதீர்கள் எப்படியோ தேடிகண்டு பிடித்து தண்டிக்கப்படுவீர்கள். தண்ணீரில் நஞ்சுகலந்திருப்பதாக வதந்தி பரப்பிய கொழும்பைச்சேர்ந்த இருவரை பொலிசார் ICCPR ன் கீழ் உள்ளே தள்ளியுள்ளார்கள்.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தர்ப்ப வாதத்தை பாவித்தால் இந்த பயங்கரவாத தடுப்புச்சட்டத்தால் ஒரு மாதமாவது பாதிக்கப்படுவது அப்பாவிகளே!

Web Design by The Design Lanka