மன உறுதியோடு நில்லாமல் இலக்கியப் பணி செய்தவர் கலாபூஷணம் மருதூர் வாணர் - Sri Lanka Muslim

மன உறுதியோடு நில்லாமல் இலக்கியப் பணி செய்தவர் கலாபூஷணம் மருதூர் வாணர்

Contributors
author image

P.M.M.A.காதர்

கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-


பிரபல எழுத்தாளரும், கவிஞரும் சமாதானம் சஞ்சிகையின் ஆசிரயருமான மருதமுனையைச் சேர்ந்த கலாபூசணம் எஸ்.எல்.ஏ. லத்தீப் என்ற மருதூர் வாணர் மரணித்து இன்று 2019-05-08ஆம் திகதியுடன் பத்து வருடம் பூர்த்தியடைந்துள்ளது.இதனையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
மருதூர் வாணர் தனது எழுபதாவது வயதில் கடந்த 2009.05.08ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மருதமுனை பிரதான வீதியைக் கடக்க முற்படும் போது விபத்தில் உயிரிழந்தார்.இன்னாலில்லாஹிவஇன்னாஇலைஹி ராஜிஊன்.

மருதூர் வாணர் இலங்கையின் இலக்கியப்பரப்பில் இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை புரிந்துள்ளார்.இலக்கியமே இவர் பேச்சிலும் நடைமுறைச் செயற்பாடுகளிலும் இருந்து வந்ததையாரும் மறுக்கமுடியாது.
எல்லோரோடும் மிகவும் அன்பாகவும் அந்நியோன்யமாகவும் உறவை வளர்த்துக் கொள்வதில் முன்னோடியாக இருந்தார்.தள்ளாத வயதிலும் தளராத மன உறுதியோடு நில்லாமல் இலக்கியப் பணிசெய்துவந்தவர் மருதூர் வாணர்.

தனக்கென ஒரு பாணியை அமைத்து தனித்துவமாக யாரும் அணியாத வித்தியாசமான சல்வார் உடையணிந்து; தனது பழைய சைக்கிள் வண்டியில் தினமும் நூலகத்திற்குச் சென்று நாளேடுகள் அனைத்தையும் வாசித்து முடிப்பது அவரதுநாளாந்தக் கடமைகளில் முக்கியமானதொன்றாகும்.

எறும்புபோல் சுறுசுறுப்பாக எல்லாக் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் முன்வரிசையில் அமர்ந்துகொள்வார்.அவருக்கு எது சரி என்று படுகின்றதோ அதைச் செய்வார்.நல்ல கலை இலக்கிய எழுத்துக்களைப் பாராட்டுவார்;;.யாராக இருந்தாலும் பிழையானவற்றை துணிந்து விமர்சிப்பார்.

கவிஞர்கள் எழுத்hளர்கள் சிலர் உட்பட இந்தியக் கவிஞர்; கவிக்கோ அப்துர் ரஹ்மானைப் பற்றியும் மருதூர்வாணர் விமர்சிக்கத் தவறவில்லை. ஆரம்பகாலத்தில் கலை இலக்கித்தோடு அசியலில் அதிக ஈடுபாடுகொண்டு பல தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார்.

தந்தை செல்வநாயகத்துடனும் பின்பு மர்ஹ_ம்; எம்.எச்.எம். அஷ்ரபுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.இவர்1939.08.24ஆம் திகதி மருதமுனையைச் சேரந்த சாலிஹ்லெவ்வை போடியார், சரீபா உம்மாதம்மபதியருக்கு 3வது மகனாக மருதமுனையில் பிறந்தார்.

தனது இலக்கிய ஆசான்களாக புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளையையும் அவருக்குப்பின் புலவர்மணிஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களையும் நன்றியுடன் நிiவுகூறியியருக்கின்றார்.1951ஆம்; ஆண்டு வீரகேசரிப் பதிரிகையின் மாணவர் பகுதியில் “என் தம்பி”என்ற தலைப்பில் பிரசுரமான கவிதையின் மூலம் தனது11வது வயதில் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்தார்.
இவர் பாடல்,நடிப்பு இசை ஆகியதுறைகளில் அதிக ஈடுபாடுள்ளவர்.அத்தோடு நூற்றுக்கணக்கான கவிதைகள்,சிறுகதைகள்,கட்டுரைகள் என எழுதியுள்ளதோடு நபி ஜனனப்பா,இசைவிருந்து,முரசொலி,பெருநாள் பரிசு,முதலிரவு,சூறாவளி மத்தியகிழகக்ககிலே போன்ற நூல்களையும் இன்னும் பல நூல்கலையும்; எழுதியுள்ளார்.

மேலும் தேன்மதி என்ற சஞ்சிகையை வெளியிட்டதோடு இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வின் மூலம் சமாதானம் வளரவேண்டும் என்ற தூய எண்ணத்தோடு“எல்லா இனங்களும் இணைந்தன்புகொள்வோம்”என்ற தொனிப்பொருளில் 1988 ஜூலை மாதம் முதலாவது“சமாதானம்”சஞ்சிகை இதழை வெளியிட்டு மரணிக்கும் வரை 16 இதழ்களை வெளியிட்டுள்ளதேடு 17வது சமாதானம் இதழை வெளியிட இருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவரது எழுத்துப் பணிக்கு தினகரன்,வீரகேசரி,தினபதி,சிந்தாமணி,தினக்குரல் நவமணி,சுடர் ஒளி,இடி,ஈழநாதம்,தமிழ்அலை,முஸ்லிம் குரல்,தினச்சுடர் போன்ற பத்திரிகைகளுக்கு எப்போதும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வார்.மேலும் சுதந்திரன்,விவேகி,கலாவில்லி,கதம்பம்,சுடர்,ராதா,திருமகன் வெற்றிமணி, செங்கதிர்,சரித்திரன் போன்ற சிறு பத்திரிகைகளுக்கும் இவர் ஆக்கங்களை எழுதியுள்ளார்.

குட்டிப் புலவன் இசைவாணர், ஈழபாரதி எனப் பல பட்டங்களைதன்னகத்தே கொண்டதோடு 2001ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது அரசாங்கத்தால் இவருக்குவழங்கப்பட்டது. இவரது அரசியல் இலக்கியப் பணியைப் பாராட்டி யாழ் தந்தை செல்வா நினைவுமன்றம் 2004.04.26ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக கைலாசபதியரங்கில் “தந்தைசெல்வாவிருது”வழங்கிகௌரவிக்கப்பட்டார்.

மேலும் தினச்சுடர் விருதும் சிரேஷ்ட கவிஞருக்கான சான்றிதழும் கடந்த 2004.06.06ஆம் திகதி கல்முனையில் ஊடகப் பிரதி அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் அர்களால் வழங்கப்பட்டது.மேலும் தென்கிழக்குப் பல்கலைக் கழக பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச். காலிதீன்,செழியன் பேரின்பநாயகம் உட்படபலர் இவருக்குப் பொன்னாடைபோர்த்தி இவருக்கு இவரது இலக்கியப் பணியைபாராட்டியுள்ளனர்.

இலக்கியமே தனது உயிர் மூச்சாக எண்ணிச் செயற்பட்டுவந்த இவருக்கு இவர் மரணிக்கும் வரை கிழக்க மாகாண ஆளுனர் விருது,வித்தகர் விருது என்பன வழங்கப்படாமல் போனது பெரும் குறையாகும். இலங்கைஅரசாங்கத்தால் கலை இலக்கியத்துறைக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்படுகிறதோ அத்தனை விருதுகளையும் பெறுவதற்கு மருதூர்வாணர் தகுதியானவர் என்பது பலரது அபிப்பிராயமாகும்.
பேரிதாக எந்த வருமானமும் இல்லாத நிலையில் இவர் தனது இலக்கியப் பணியைச் செய்துவந்ததோடு இன நல்லுறவுக்காக சமாதானம் என்றபேரிலே 16 இதழ்களை வெளியிட்டு சாதனைபடைத்துள்ளார்.இவரது இலக்கியப் படைப்புகளின் பிரசவத்திற்கு சட்டத்தரணியும்,பதில் நீதிபதியுமான மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். பதுறுத்தீன் அவ்வப்போது நிதியுதவிகளை வழங்கி மருதூர் வாணரை உச்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மருதூர்வாணர் சேமித்து வைத்திருந்த பெருந்தொகையான நூல்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,மருதமுனைப் பொது நூலகம்,மருதமுனை அல்-மனார் மத்தியகல்லூரி நூலகம் ஆகியவற்றிற்கு தனது அந்திமக் காலத்தில் வழங்கினார்.இவரது கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள்,நூல்கள்,ஏனைய இலக்கியப் படைப்புக்கள் அனைத்தும் தென்கிழக்குப் பல்ககலைக்ககழகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மருதூர்வாணர்; என்னுடனும் எனது குடும்பத்தினருடனும் மிகவும் நெருக்கமான உறவைப் பேணிவந்தார்;.வறுமையிலுல் புலமை கொண்டு பல்வேறு ஆளுமைகளுடன் பிரகாசித்த மருதூர்வாணரின் இறப்பு இலக்கிய உலகிற்கு மட்டுமல்லாது மருதமுனைக்கும் பேரிழப்பாகும்.இவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திற்கின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team