ஏறாவூரில் பேராசிரியர் MA.நுஃமான் அவர்களுடனான ஓர் உரையாடல் » Sri Lanka Muslim

ஏறாவூரில் பேராசிரியர் MA.நுஃமான் அவர்களுடனான ஓர் உரையாடல்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Sabry


ஈழத்து இலக்கியப் பரப்பில் காத்திரமான பங்களிப்பை நல்கிவரும் பேராசிரியர் MA.நுஃமான் அவர்களுடனான ஓர் உரையாடலை சவுக்கடி கடற்கரையில் சனி (21) மாலை நான்கு மணிக்கு வாசிப்பு வட்டம் ஏறாவூர் ஏற்பாடு செய்துள்ளது.

அழைப்பிதழ் வீடு தேடி வந்து தராததால் வரமாட்டோம் என்பதாக சில படித்தவர்களும் இலக்கிய ஆர்வலர்களும் சிறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இவ்வாரோக்கியமான அமர்வுகள் என்னுடைய பொருளாதார வளர்ச்சிக்கானது அல்ல. பதினைந்து அமர்வுகளை சிறப்பாக நடாத்தியுள்ளோம். எல்லா அமர்வுகளையும் முகநூலில் பிரசுரிக்கிறோம். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள முடியும்.

இப்பணிகளினால் ஓரளவு சோர்வும் அடைந்துள்ளேன். ஆனாலும் முடியுமானவரை முன்னெடுப்போம். எந்த அமர்வுகளிலும் கலந்து கொள்ளாதவர்களே விமர்சனங்களை முன்வைத்து வருவது வேடிக்கையானது.

எல்லோரும் சேர்ந்து பயணிப்போம். எல்லோருக்குமான பணிதான். நல்லவைகளை எதிர்காலத்துக்கு கையளிப்பதும், சிறந்த பொழுதுபோக்கும் மனமகிழ்ச்சிக்காகவுமே இவையெல்லாம்.

பேராசிரியருடன் கதைகள் பலபேசி கொண்டாடுவோம் தோழர்களே.

வாருங்கள்.

IMG_6145

Web Design by The Design Lanka