மருதமுனை நற்பிட்டிமுனையில் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' அபிவிருத்தி வேலைகள் அங்குரார்ப்பணம் - Sri Lanka Muslim

மருதமுனை நற்பிட்டிமுனையில் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ அபிவிருத்தி வேலைகள் அங்குரார்ப்பணம்

Contributors
author image

Farook Sihan - Journalist

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில் நற்பிட்டிமுனையில் லோயர் தோட்ட வீதியும் மருதமுனையில் மசூர் மௌலானா குறுக்கு   வீதிக்கும் கொங்கிறீட் இடுதல் மற்றும் நற்பிட்டிமுனை  பகுதியில் பயனாளி ஒருவருக்கு  திரிய பியச வீடு நிர்மாணம் போன்ற அபிவிருத்தி வேலைகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு    வெள்ளிக்கிழமை(10)   இடம்பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதியின் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின ஊடாக  ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்  தயா கமகே அமைச்சினூடாக மேற்குறித்த    கிராமங்களில் வீடு மற்றும் பாதைகள் அமைத்தல் திட்டம்  கல்முனை பிராந்திய சமுர்த்தி முகாமையாளர் நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நசீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்
அத்துடன் இந்நிகழ்வில்  முன்னாள் ஐ.தே.கட்சி கல்முனை மாநகர சபை உறுப்பினர் நபார் கல்முனை  பிரதேச செயலக கணக்காளர் யு.எல் ஜவாஹிர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஐ.தே.க.நற்பிட்டிமுனை மத்திய குழு தலைவர் சாலித்தின்(கொப்பே கொடுவ)  ஆகியோருடன் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team