பிரச்சனைகளுக்கு விமர்சனங்கள் தீர்வாக அமையாது » Sri Lanka Muslim

பிரச்சனைகளுக்கு விமர்சனங்கள் தீர்வாக அமையாது

party

Contributors
author image

Junaid M. Fahath

எந்த பிரச்சினைகளுக்கு விமர்சனங்களால் தீர்வோ அல்லது மாற்றமோ பெறுவது அதிகமாக சாத்தியமற்றது என்பது எனது பார்வை . பிரச்சனைகள் தொடர்பில் விமர்சனம் செய்யும் போது அப் பிரச்சனையின் கனதி அதிகரிக்குமோ தவிர தீர்வு தொலைந்து விடும். விமர்சனம் செய்வதற்கு பதிலாக முதலில் நம்மால் தீர்வு காண முடியுமா என பார்க்க வேண்டும் நம்மால் மாத்திரம் முடியாது என்றால் எவ் வழியாக தீர்வை பெற முடியும் என்பதை தேட வேண்டும் எந்த பிரச்சனைக்கும் நிச்சயம் தீர்வு உண்டு என்பதை உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் இருக்கிற பயங்கரவாத செயல்களில் மிக முக்கியமான பயங்கரவாதம் ஊடக பயங்கரவாதம் சர்வதேசத்தில் குழப்பத்தை உருவாக்கி தனது இலாபத்தை அதிகரிக்கும் சில ஊடகங்களை பற்றி மட்டுமே நான் இங்கு பேசுகிறேன் ஊடக தர்மத்தை பேணி நடக்கும் ஊடகத்தை குறிப்பிடவில்லை.

அவ்வாறே இந்த பயங்கரவாத ஊடகங்கள் மக்கள் மத்தியில் போலியான செய்திகளையும் இனங்கள், மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய தகவல் பரிமாற்றம், சிறிய சம்பவங்களை பெரிய போராக மாற்றுதல் போன்ற செயற்பாடுகளால் மக்களை அழித்துக்கொண்டு இருக்கிறது.

அவ்வாறான சில ஊடகங்கள் நமது இலங்கையிலும் இருக்கின்றது என்பதே மிகவும் ஆபத்தான விடயம் ஊடகங்களை யாரும் அடக்க முடியாது ஏன் என்றால் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது வழங்கப்பட்ட சுதந்திரம் மக்களின் நலனுக்காக ஆனால் சில பயங்கரவாத ஊடகங்கள் வழங்கப்பட்ட சுதந்திரத்தை சுய நலமாக பயண்படுத்துகிறார்கள்.

இந்த ஊடகங்களின் ஆபத்தில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்று நினைத்து அந்த ஊடகங்களை விமர்சனம் செய்தால் அதில் எந்த பயனும் கிடையாது அவ்வாறான ஊடகங்களை புறக்கணிப்பதே தற்காலிய தீர்வாக மாறும் நேயர்கள் அவ் ஊடகத்தை புறக்கணிப்பதன் மூலம் அந்த ஊடகத்தின் எல்லா வருமான வாசல்களும் மூடப்பட்டுவிடும் ஊடகத்தின் இயக்கத்திற்கு முழுமையான பங்களிப்பு விளம்பரமும் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் நேயர்கள் குறைந்து விட்டால் விளம்பரங்களில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுவிடும். இதன் மூலம் அந்த ஊடகமே இல்லாது போகும் வாய்ப்பும் உண்டு இதுவே நிரந்தர தீர்வாக கூட அமையலாம்.

எனவே இவ்வாறான ஊடகங்களை நாம் விமர்சித்து அவர்களை பிரபல்யப்படுத்தாமல் புறக்கணித்து இல்லாது செய்வோம்

Web Design by The Design Lanka